ஒட்டுமொத்தமாக முடங்கிய லைக்கா நிறுவனம்! ‘இந்தியன் 2’ படத்துக்கும் இப்படி ஒரு பிரச்சினையா?

by Rohini |
kamal
X

kamal

Indian Kamal: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்த நிலையில் இப்போது வந்த தகவலின்படி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது. விக்ரம் என்ற மாபெரும் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தது இந்தியன் 2 திரைப்படம்.

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இப்போது வரை படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகின்றது. இடையிடையே சில பிரச்சனைகள் எழுந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று கடைசியில் ரெட் ஜெயன்ட் இந்த படத்திற்குள் நுழைந்து அதன் பிறகு படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: முரளி அந்த விஷயத்துல ரொம்பவே வீக்காம்… பிரபல இயக்குனர் என்னா சொல்றாருன்னு தெரியுமா?

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் படம் ரிலீஸ் ஆகப் போவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் புரொடக்ஷன் பணிகளை தொடங்காமலேயே உள்ளதாம். அது மட்டும் இல்லாமல் ஒரு பாடல் காட்சியும் படமாக்க வேண்டி இருக்கிறதாம். ஏற்கனவே லைக்கா நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால்தான் இந்த கால தாமதம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் கமல் தக் லைஃப் படத்தில் பிசியாக இருப்பதாலும் அவர் வந்த பிறகு அந்த பாடல் காட்சியை எடுப்பதாகவும் காத்துக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர் அதனால் ஜூன் மாதம் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில் இப்போது அந்தப் படம் தள்ளிப் போவதால் கமல் கேமியோ ரோலில் நடித்த கல்கி திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீசாக உள்ளதாம்.

இதையும் படிங்க: புதுசா யோசிக்கவே தெரியாதா? இன்னும் அரைச்ச மாவையே அரைச்சி தலைப்பு வைக்கும் இயக்குனர்கள்!

கல்கி திரைப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க கமல் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். வெறும் 15 நாள்கள்தான் கால்ஷீட் கொடுத்தார் கமல். அதற்கு கமல் வாங்கிய சம்பளம் 20 கோடி என்று சொல்லப்படுகிறது.

Next Story