ஒருவழியாக முடியவுள்ள இந்தியன் 2!.. நிம்மதி பெருமூச்சி விடும் கமல்ஹாசன்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா என பலரும் நடித்து 1996ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் போராடும் கதை. கதை புதுவிதமாக இருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
அதன்பின் சில வருடங்களுக்கு முன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தில் கமலுடன் சித்தார்த். காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் என பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் மரணமடைந்தனர். அதன்பின் பல மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் அப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கும், கமலுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இப்படி பல மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. அதன்பின் கமலின் நடிப்பில் உருவான விக்ரம் படம் மெகா ஹிட் நடிக்கவே இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் டேக் ஆப் ஆனது. விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஜூலை 4ம் தேதி தலைக்கோணத்தில் படப்பிடிப்பு முடியவுள்ளது. இப்படம் காரணமாக விக்ரமுக்கு பின் வேறுபடங்களில் நடிக்க முடியாமல் இருந்த கமல் நிம்மதி அடைந்துள்ளார்.
இப்படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தகக்து.