பல கெட்டப்புகளில் கலக்கும் உலக நாயகன்!. சும்மா அடிப்பொலி!.. இந்தியன் 2 டிரெய்லர் வீடியோ இதோ!...

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்க உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகம் 1996ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலுடன் நெடுமுடி வேணு, கவுண்டமணி, சுகன்யா, ஊர்மிளா, மனிஷா கொய்ராலா போன்ற பலரும் நடித்திருந்தனர்.

பல வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் துவங்கினார். இப்படம் துவங்கியதிலிருந்தே பல பஞ்சாயத்துக்களை சந்தித்தது. அதன்பின் அந்த பஞ்சாயத்துக்கள் தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கி ஒரு வழியாக படம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியன் 2 படம் உருவானபோதே இந்தியன் 3-க்கு தேவையான பல காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்திய 2 படத்திற்காக ஷங்கர், கமல் இருவரும் கடுமையான உழைப்பை கொட்டி இருக்கிறார்கள். இப்படத்தின் சில புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மும்பையில் நடந்து கொண்டது. இதில், ஷங்கர், கமல் மற்றும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சித்தார்த் ஆகியோர் பங்கேற்றனர்.

indian

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஷங்கரின் வழக்கமான ஸ்டைலில் வந்திருக்கிறது இந்தியன் 2. ‘இதையெல்லாம் தட்டி கேட்க ஒருவர் வரவேண்டும்’ என சொல்ல எண்ட்ரி கொடுக்கிறார் இந்தியன் தாத்தா கமல். பல கெட்டப்புகளில் வந்து ஊழல் செய்பவர்களை புரட்டி எடுக்கிறார்.

அதோடு, ரஜினியை போல பன்ச் வசனங்களும் பேசுகிறார் இந்தியன் தாத்தா. ‘ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது’.. ‘நீங்க காந்திய வழி. நான் சுபாஷ் சந்திர போஸ் வழி’.. ‘டாம் அண்ட் ஜெரி கேம் ஸ்டார்ட்’ என சொல்லி பூனைப்போல் கத்தி காட்டுகிறார் இந்தியன் தாத்தா. அதோடு, அஜித்தை போல அதிரடியாக சண்டையும் போடுகிறார்.

பல காட்சிகளில் இந்தியன் முதல் பாகத்தில் வந்தது போல வர்ம கலையையும் இந்தியன் தாத்தா பயன்படுத்துகிறார். மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவே கணிக்கப்படுகிறது.

 

Related Articles

Next Story