
Cinema News
‘இந்தியன்’ படத்திற்கு கூஸ் பம்பே அதுதான்! இதுல கோட்ட விட்டுட்டீங்களே?..
Indian 2: கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன். இன்று போல் அந்த காலகட்டத்தில் எந்தவொரு சோஷியல் மீடியாவும் இல்லாத சமயத்தில் இந்திய சினிமாவிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக இந்தியன் படம் அமைந்தது.
இப்போது போல் பான் இந்தியா படமாக அந்த நேரத்தில் தயாராவது என்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஊழலுக்கு எதிராக ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் போராட்டம் என்ற ஒரே ஒரு கருவை வைத்து இந்தப் படம் தயாரானது. அதுமட்டுமில்லாமல் இந்த ஒன்லைன் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும் வகையில் அமைந்ததால் இந்தப் படம் வெளியாக எந்த தடையும் இல்லாமல் இருந்தது.
இதையும் படிங்க: பாய் ஃப்ரண்ட் குடுத்துவச்சவர்!.. நம்ம ஸ்ருதி ஹாசன் போட்ருக்க டிரெஸ்ஸ பாருங்க!…
இந்த படம் வெளியான முந்தைய வருடம்தான் ரஜினியின் பாட்ஷா படம் வெளியாகி இண்டஸ்டிரி ஹிட்டானது. அடுத்தவருடமே இந்தியன் படம் வெளியாகி பாட்ஷாவின் வசூலை கடந்து இது இண்டஸ்டிரி ஹிட்டானது. அதுமட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா மற்றும் வட இந்தியாவிலும் பெரும் சாதனை படைத்தது.
இப்படி இந்தியன் படத்தில் ஒரு ஆழமான அரசியல் கருத்து இருந்தாலும் இந்தப் படத்தை அந்தளவு உயரத்திற்கு கொண்டு போனதுக்கு மற்றுமொரு காரணமாக இருந்தது ஏ.ஆர். ரஹ்மான் இசைதான். போராட்டத்திலிருந்து மீண்டும் வரும் கமலுக்காக சுகன்யா காத்திருக்கும் போது நம்மை மயிர் கூச்சடைய வைத்த பாடலாக ‘கப்பலேறி போயாச்சு’ பாடல் அமைந்தது.
இதையும் படிங்க: லிங்குசாமியை கதறவச்ச அந்த ஒரு திரைப்படம்… ஒடஞ்சு போன மனுஷன் என்ன செஞ்சாரு தெரியுமா?…
அந்தப் பாடலை இப்பொழுது கேட்டாலும் ஏதோ ஒரு வித உணர்வு எழுந்து உணர்ச்சி பொங்க வைக்கும் வகையில்தான் இருக்கும். அந்தப் பாடல் மட்டும் இல்லாமல் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். கதை ஒரு பக்கம் சிறப்பாக அமைந்திருந்தாலும் படத்திற்கான இசைதான் கூடுதல் சிறப்பு.
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ஒரு ப்ரோமோ டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் அனிருத்தின் ஒரு பாடலுடன் அந்த டீஸர் வெளியானது. அதை கேட்டு ரசிகர்கள் தலைவா.. நாங்கள் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறோம் என ஏஆர் ரஹ்மானுக்காக பதிவிட்டிருந்தனர். இந்தியன் படத்தில் உள்ளதுமாறி அந்தளவுக்கு அனிருத்தின் இசை இந்தியன் 2 படத்தில் எடுபடவில்லை என்பதுதான் ரசிகர்களின் பெரும்பாலான கருத்தாக இருக்கிறது.
இதையும் படிங்க: ஓட்டுக்கு இப்படியெல்லாமா பண்ணுவீங்க! ரகசியம்னு நினைச்சு அம்பலப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்