Connect with us

ப்ளீஸ் அந்த விவகாரத்தை என்கிட்ட கொண்டு வராதீங்க.! கொந்தளித்த Mr.பிரமாண்டம்.!

Cinema News

ப்ளீஸ் அந்த விவகாரத்தை என்கிட்ட கொண்டு வராதீங்க.! கொந்தளித்த Mr.பிரமாண்டம்.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்2 எனும் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனாவுக்கு முன்னரே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நின்று போனது. அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் சூட்டிங் நடைபெறாமல் இருந்தது.

அந்த விபத்து ஏற்பட்டதில் இருந்து இயக்குனர் ஷங்கர் தரப்பு மற்றும் தயாரிப்பு தரப்புக்கு இடையே பிரச்சினை எழுந்தது. இதன்காரணமாக சூட்டிங் நடைபெறாமல் இருந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று விட்டது. அதன் பிறகு ஷங்கர் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். தற்போது தெலுங்கில் ராம்சரணை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.

அந்தப் படத்தில் கவனம் செலுத்தி வருவதால் இந்தியன்2 விவகாரத்தை கவனிக்க தற்போது புதிய நபரை நியமித்து உள்ளாராம். ‘இனி இந்தியன்2 தொடர்பாக எந்த விவகாரம் வந்தாலும் நீங்களே சமாளித்து கொள்ளுங்கள்’ என அவரிடம் கூறியுள்ளாராம். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்’ என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

இனி இந்த இந்தியன்-2 எப்போது தீர்ந்து எப்போது ரசிகர்களை வந்தடையபோகிறது என்பது கமல்ஹாசன், லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கே தெரியும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top