மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு… இந்தியன் 2 தாத்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Published on: June 28, 2024
Indian 2
---Advertisement---

கமல் படங்கள் என்றாலே ரிலீஸ் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. அந்த வகையில் இந்தியன் 2 படத்திற்கும் ஒரு பிரச்சனை வந்து விட்டது. இந்தப் படத்திற்கு தான் அதிகளவில் பிரச்சனை. இப்போது எல்லாம் முடிந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய பிரச்சனை. என்னன்னு பார்க்கலாமா…

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் இந்தியன் 2 வரும் ஜூலை 12ல் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது தான் கமல் கல்கி படத்திற்கான புரொமோஷன் வேலை முடிந்து இந்தியன் 2 படத்திற்கான வேலைகளில் உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார்.

Also Read

எத்தனையோ பிரச்சனைகளுக்கு நடுவில் படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஒரு பிரச்சனை படத்திற்கு வந்துள்ளது.

இயக்குனர், ஷங்கர், கமல், லைகா நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அது என்னன்னு பார்ப்போம்.

மதுரை எஸ்எம்எஸ் காலனியில் உள்ள மஞ்ச வர்மக்கலை மற்றும் தற்காப்புக்கலை ஆராய்ச்சி அகாடமியின் ஆசான் ராஜேந்திரன் ஒரு மனுவை மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். அதில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கமல் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து படம் எடுக்கப்பட்டது.

Indian 2
Indian 2

தன்னுடைய பெயரும் அப்போது பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது எடுத்து வரும் இந்தியன் 2ல் வர்மக்கலை பயன்படுத்துவது குறித்து என்னிடம் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை. அதனால் படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிடக்கூடாது என்று மனு கொடுத்துள்ளார்.

இந்த மனுவிற்கு உரியவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 9ம் தேதி காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருமாம். தடைகளைத் தகர்த்தெறிவார் உலகநாயகன் என்பது தெரிந்த விஷயம். இந்த வழக்கின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.