Categories: latest news

‘நீலோற்பம் நீரில் இல்லை…’ இந்தியன் 2ல் தெறிக்க விட்ட ரொமான்டிக் சாங்கோட ஹைலைட்டே இதுதான்..!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பாரா சாங் பர்ஸ்ட் சிங்கிளில் வெளியாகி பல்வேறு கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் இன்று செகண்ட் சிங்கிள் நீலோற்பம் நீரில் இல்லை என்ற ரொமான்டிக் சாங் வெளியாகி உள்ளது. அனிருத்துக்கு இந்தப் பாடல் ஒரு அருமையான காதல் மெலடி என்றே சொல்ல வேண்டும்.

சித்தார்த், ரகுல் பிரீத்திசிங் காதல் ஜோடிக்குக் கொடுக்கப்பட்ட பாடல் இது. ஸ்டைலான சித்தார்த்தைப் பார்க்க முடிகிறது. அவருடன் ரகுல் பிரீத்திசிங்கின் காதல் சேட்டைகளையும் பார்க்க சுவாரசியமாக உள்ளது. பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். அப்பி வி மற்றும் ஸ்ருதிகா சமுத்ராலா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதென்ன நீலோற்பம் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. நீலோற்பம் என்றால் நீல நிற அல்லி மலரைக் குறிக்கிறது. இது இலங்கையின் தேசிய மலர் என்றும் சொல்லப்படுகிறது. பாடலில் அந்த மலரை அடிக்கடிக் காட்டுகின்றனர்.

Indian 2

‘நீலோற்பம் நீரில் இல்லை… ஏன் தாண்டினாய் எல்லை… இனி ஏதும் தடங்கல் இல்லை… எப்போதும் நெஞ்சில் தொல்லை… தூக்கங்கள் உன்னில்லை… இதை மீறி புகார்கள் இல்லை…, நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தராத போதும், எறிந்திடும் காற்றில் முத்தங்கள் வந்தாக வேண்டும்’ என்று காதலை உரிமையுடன் கேட்டு வாங்குவதாகப் பாடல் வரிகள் அழகுற அமைந்துள்ளன.

தொடர்ந்து ‘மாறா மனம் இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன, தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன’ என்று சொல்லியிருப்பது புதுமையாக உள்ளது. இதுதான் பாடலின் ஹைலைட்.

இதையும் படிங்க… லெஜண்ட் சரவணாவோட அடுத்த படம் இதுக்காகத்தான் பண்றேன்!.. ஓப்பனா பேசிய கருடன் பட டைரக்டர்!..

தொடர்ந்து வரும் ஜூன் 1ம் தேதி ஆடியோ லாஞ்சும், ஜூன் 7 ம் தேதி இந்தியன் முதல் பாகத்தின் ரீ ரிலீஸ், அதையடுத்து ஜூலை 12ல் இந்தியன் 2 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள், புரோமோவை படக்குழுவினர் முடுக்கி விட்டு இருக்கிறார்கள். இந்தியன் தாத்தா, இந்தியன் 2ல் என்ன செய்யப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

32 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago