Connect with us
Rajni Indian 2

Cinema History

இந்தியன் 2 டிரெய்லர் அப்டேட்..! கமலைப் பற்றி ரஜினி இப்படி சொல்லலாமா..?!

கமலும், ரஜினியும் தமிழ் சினிமா உலகின் இருபெரும் ஜாம்பவான்கள். நடிக்க வந்து இவ்வளவு நாள்கள் ஆகியும் தங்களுக்கான இடத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதுவே மிகப்பெரிய விஷயம். தற்போது வரை இணைபிரியா நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜா கமலுக்குத் தான் நிறைய சூப்பர்ஹிட் சாங்ஸ் கொடுத்துருக்காருன்னு ரஜினி சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது. கமலைப் பொருத்தவரை சினிமாவில் அக்கு வேறு ஆணி வேராக அலசி ஆராய்ந்தவர்.

இதையும் படிங்க… என்னது மைனாவின் கணவர் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா? நம்பியாருக்கே டஃப் கொடுத்தவர் ஆச்சே

அவர் தான் நடிக்கும் படங்களில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மெனக்கிடுபவர். 5 வயது முதலே கலையுலகிற்கு வந்தவர். இளையராஜாவுடன் அவர் பணிபுரியும்போது அவருடன் இருந்து தனக்கான பாடல்கள் இப்படி இப்படி வர வேண்டும் என்று அவ்வப்போது தனது விருப்பத்தையும், ஆலோசனைகளையும் சொல்வதுண்டு.

அதனால் அவருக்கு அதிகமான பாடல்கள் சூப்பர்ஹிட்டாக வந்து இருக்கலாம். இதைப் போய் பெரிய விஷயமாக சிறுபிள்ளைத்தனமாக ரஜினி சொல்வது சரியா?

அதே வேளையில் ரஜினிக்கும் ஏகப்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை இளையராஜா தந்துள்ளார். காதலின் தீபம் ஒன்று, ராமனின் மோகனம், ங்கிட்ட மோதாதே, பொதுவாக எம் மனசு தங்கம் ஆகிய பாடல்களை இளையராஜா தானே தந்துள்ளார்.

இது கமல் மீதுள்ள நட்பையும் மீறிய பொறாமையாகவே தென்படுகிறது. இந்த வயதிலும் இப்படி ஒரு பேச்சு தேவையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க… கல்கியில் கமல் நடிக்க சம்மதிச்சதுக்கு இதுதான் காரணமா? என்ன ஒரு புத்திசாலித்தனம்?!

இந்தியன் 2 படத்திற்கான அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வந்தவண்ணம் உள்ளன. கல்கி 2898 AD படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல் இந்தப் படத்தில் நடித்ததற்காகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

இந்தப் படம் வருகிற 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதனால் அதற்கு மறுநாள் 28ம் தேதி இந்தியன் 2 படத்திற்கான டிரெய்லரை வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top