Connect with us

கன்னித்தீவு தொடர்கதையான இந்தியன் 2 விவகாரம்

shankar

latest news

கன்னித்தீவு தொடர்கதையான இந்தியன் 2 விவகாரம்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2018ல் வெளியான படம் 2.ஓ. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் எந்திரன் படத்திற்குப் பின் ஷங்கர் இயக்கிய இந்தப்படமும் ஓடவில்லை.

இதையடுத்து கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ஷங்கர். எனவே 1996ல் அவர் கமலை வைத்து இயக்கிய மெகா ஹிட் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என பிளான் செய்தார்.

இதையடுத்து 25 வருடங்களுக்குப் பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் கமலுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வந்தனர்.

indian 2

indian 2

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் தயாரிப்பு தரப்பான லைக்காவுடன் ஷங்கருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக மீண்டும் தொடங்கவிருந்த படப்பிடிப்பு தடைபட்டது.

இதற்கிடையில் இந்தியன் 2வை கிடப்பில் போட்டுவிட்டு, தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு தெலுங்குப் படம் இயக்க சென்றுவிட்டார் ஷங்கர். பின்னர் மீண்டும் லைக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால் படப்பிடிப்பு விரைவாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு ஓவர் சீன் போடும் நடிகர்… இவர் அலப்பறை தாங்க முடியலடா சாமி…..

எஞ்சிய படப்பிடிப்பை முடிப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஷங்கர் லைக்காவிடம் கேட்டாராம். அந்த தொகையை கொடுக்க முன்வந்த லைக்கா, எவ்வளவு நாளில் படத்தை முடிப்பீர்கள் என்பதை ஒரு அக்ரிமென்டில் எழுதிக்கொடுங்கள் என கேட்டார்களாம். இதற்கு ஷங்கர் சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டாராம்.

இதனால், இந்தியன் 2 வருமா, வராதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தால் படத்தை டிராப் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறதாம் லைக்கா தரப்பு.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top