இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…

Published on: January 3, 2024
Indian 2
---Advertisement---

1996ல் வெளியான இந்தியன் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியின் தொடர்ச்சியாக 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வர உள்ளதால், இந்தப் படத்தின் மீது ஏகப்பட்ட எதிபார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தியன் படத்தில் தாத்தாவாக வரும் கமல் மேக்அப்பில் மிரட்டியிருப்பார். அதே போலத் தான் இந்தியன் 2லும் மிரட்ட உள்ளார்.

இதையும் படிங்க… சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்!.. பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்…

Also Read

இந்தியன் படத்தில் பின்னணி இசையிலும், பாடல்களிலும் ஏ.ஆர்.ரகுமான் சக்கை போடு போட்டு இருந்தார். அதே போல இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைந்துள்ளதாம். இந்தியன் 2 படத்தில் மறைந்த நகைச்சுவை ஜாம்பவான் விவேக்கும், வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து இருப்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

இந்தியன் 2 படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு படத்தின் துவக்க நாளில் இருந்தே வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்போது படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கோடை விருந்தாக வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Sh-Ani
Sh-Ani

அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படத்தின் பட்ஜெட்டில் பெரும்பாலான செலவு இதற்குத் தானாம். இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் ஷங்கர் வெளியீட்டு தேதியைப் பற்றி அறிவிப்பாராம்.

தொடர்ந்து இந்தியன் 3 படத்திற்கான வேலையும் நடந்து வருவதால், அந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்பட பலர் உலகநாயகனுடன் சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் ஸ்டூடியோவுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

அதே போல அனிருத்தின் இசை படத்திற்கு பக்கபலமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலுக்கு வரும் படம் என்பதால் கமலும் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்கமான நம்பிக்கையுடன் செயலாற்றி வருகிறார். அதே போல் மணிரத்னத்துடன் கைகோர்க்கும் கமல் தக் லைஃப் படத்திற்கும் விரைவில் படப்பிடிப்புத் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.