1996ம் ஆண்டு அவர் கமலை வைத்து ஷங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்க திட்டமிட்டார்.
இதையடுத்து 23 வருடங்களுக்குப் பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் கமலுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வந்தனர்.
ஆனால், படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். எனவே படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் தயாரிப்பு தரப்பான லைக்காவுடன் ஷங்கருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக மீண்டும் தொடங்கவிருந்த படப்பிடிப்பு தடைபட்டது.
பொறுத்து பொறுத்த பார்த்த ஷங்கர் இந்தியன் 2வை கிடப்பில் போட்டுவிட்டு, தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு தெலுங்குப் படம் இயக்க சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் லைக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் படப்பிடிப்பு விரைவாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எஞ்சிய படப்பிடிப்பை முடிப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஷங்கர் லைக்காவிடம் கேட்டாராம். அந்த தொகையை கொடுக்க முன்வந்த லைக்கா, எவ்வளவு நாளில் படத்தை முடிப்பீர்கள் என்பதை ஒரு அக்ரிமென்டில் எழுதிக்கொடுங்கள் என கேட்டார்களாம்.
இதற்கு ஷங்கர் சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டாராம். அதோடு, மீண்டும் மீண்டும் ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸை லைக்கா தரப்பு அனுப்ப கடுப்பான ஷங்கர் இந்தியன் 2 வை கை விட்டுவிடுவது என முடிவெடுத்து விட்டாராம்.
இதன் மூலம் ரசிகர்களுக்கு நாம் கூற வருது என்னவெனில் இந்தியன் 2 திரைப்படம் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதுதான்.
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…