இந்தியன் பர்ஸ்ட் சிங்கிளில் மாஸ் காட்ட தயாராகும் அனிருத்… அதுல தான்டா நான் ஸ்பெஷலிஸ்ட்டே!..

Published on: May 21, 2024
---Advertisement---

Indian: கமல் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக காத்திருக்கும் இந்தியன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன். முதல் பாகத்தில் சுதந்திரத்தை மையமாக வைத்தும், ஊழல் செய்பவர்களை தண்டிக்கும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில் கமல் வெகு சிறப்பாக நடித்து பாராட்டுகளை பெற்றார். படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்தது.

இதையும் படிங்க: எம்.எஸ்.விக்கே பிடிக்காத பாடல்!.. நம்பிக்கை சொன்ன கண்ணதாசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டா?!..

படத்தின் இரண்டாம் பாகத்தை 2017 ஆம் ஆண்டு அறிவித்தார். ஷூட்டிங் பரபரப்பாக தொடங்கினாலும் பல தடைகளை தாண்டி சமீபத்தில் தான் இதன் படப்பிடிப்பு முடிந்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. மிக அதிகமான காட்சிகளை படமாக்கினால் இதை இரண்டு பாகங்களாக வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

அந்த வகையில் இந்த படத்தின் முதல் இரண்டாம் பாகம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கமலின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இந்தியன் தாத்தா இந்த பாகத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என ரசிகர்கள் பெரிய ஆவலில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘விடுதலை’ படத்திற்கு எதிராக சேலஞ்ச் விட்ட சிவகார்த்திகேயன்! சரியான போட்டிதான்

முக்கியமாக திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிக்கு ஜெயிலர் படத்திற்காக ஹுக்கும் பாடலையும்,  விஜயிற்காக லியோ திரைப்படத்தில் பேடாஸ் பாடலையும் இசையமைத்து வெற்றி கொடி நாட்டினார் அனிருத். இதனால் கமலுக்காக அவர் ஏற்கும் பாடல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து, அனிருத்தின் முதல் வாய்ப்பாக இந்தியன் படத்தின் முதல் சிங்கிளை படக்குழு நாளை வெளியிட இருக்கிறது. இதற்கான புரோமோ வீடியோ மாலை ஐந்து மணிக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், பாரா என பாடல் தொடங்க இருப்பதாகவும், பா விஜய் பாடலை எழுதி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் அறிவிப்பை காண:  https://x.com/LycaProductions/status/1792805035702677782

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.