Cinema History
இந்தியன் தாத்தாவ இப்படி கோமாளியா ஆக்கிட்டாங்களே! அனிருத்துக்கு ஏன் இந்த சின்ன புத்தி?
இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. பெரும்பாலான ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமானை மிஸ் பண்றோம்னு தான் கமெண்டுகளைப் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க… ஊரே கொண்டாடும் கருடன்! உள்ளுக்குள்ள கதறும் சூரி.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா?
இந்தப் படத்தில் ஒரு பாடல் ரொம்பவே பேசுபொருளாகி உள்ளது. அது தான் கதறல் சாங். ‘தாத்தா வர்றாரு’ பாடல். இந்தப் பாடலில் என்ன சொல்றாங்கன்னே புரியல. அனிருத்துக்கு ஏன் இந்த சின்ன புத்தின்னு கேட்டுள்ளார் இந்த பிரபலம். அவர் மேலும் என்னென்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
ஷங்கர் படத்துல அனிருத்தான்னு ஆரம்பத்திலேயே நிறைய பிரச்சனைகள் கிளம்புச்சு. பாடல்கள் கலவையான விமர்சனங்களை சந்திச்சுது. இந்தப் படத்துல வந்த கதறல் சாங் உண்மையிலேயே கதற விட்டுட்டு. அனிருத்துக்கு தான் கதறல்னு சொல்லலாம். இந்தப் பாடலை 200 முறை கேட்டாலும் நமக்கு புரியாது. தமிழ்ல வார்த்தையா இல்ல. எவ்வளவோ சொற்கள் இருக்கு.
அதை எல்லாம் விட்டுட்டு ஒரு 10 வார்;த்தையைப் போட்டுட்டு மொத்த பாடலையும் முடிச்சிருக்காங்க. ஒண்ணும் இல்ல. ‘தாத்தா வர்றாரு. கதற விடப்போறாரு. எகிற விடப்போhரு… சிதற விடப்போறாரு… பதற விடப்போறாரு.’ அவ்வளவு தான். இதுக்கு மேல தெரிஞ்சிதுன்னா யாராவது சொல்லுங்க.
இதுல ரிதம் செக்ஷன்ல அந்த ஃபைபர் டேப்ப வச்சி அடிக்கிறத பார்த்தா காது வலியே வந்துடும். அதை ஒரு சில பேரு டிரெண்டிங்னு சொல்வாங்க. அவங்க எல்லாம் இசையைப் பத்தி புரியாதவங்க.
ஒருவேளை அப்படித்தான் ஷங்கர் இவரு கூட வந்துருப்பாரு போல. கமல் சார் எந்தக் கணக்குல வந்தாருன்னு தெரியல. அப்படி ஒரு பாட்டை அனிருத் பண்ணிருக்காரு. கேக்குறப்ப உண்மையிலேயே எரிச்சல் வருது.
இந்தியன் ஒண்ணுல தாத்தா வந்தாலே ஒரு டிரெண்டிங் தான். அவரு தாத்தா தானேன்னு நினைச்சா வர்மக்கலையை ரெண்டு விரல்ல காட்டி குத்தும்போது அவரைப் பார்க்க பிரமிப்பா இருக்கும். சுதந்திரப் போராட்ட வீரர். அதுக்கு அப்புறம் நடக்குற விஷயங்களைப் பார்த்து பொங்கி எழுவாரு. ஆனா இந்தியன் 2ல தாத்தா வர்ராருங்கற சாங்ல அவரை அடிபட்ட தவளை கத்துற மாதிரியா அனிருத் வரவேற்கணும்..?
இதையும் படிங்க… இந்தியன் 2 ல அப்படி ஒரு விஷயம் இருக்கா? அடுத்த மாசம் டெல்லியே களைகட்டப் போகுதா?
ஏற்கனவே அவரு 15 பாட்டு முன்னாடி போட்டுருக்காரு. ஒருவேளை இந்தியன் தாத்தாவைக் கோமாளியா ஆக்கிட்டாங்களா? ஒரு வேளை ஷங்கர் ஆக்கினாரான்னு தெரியல. படத்தைப் பார்த்தால் தான் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.