இந்தியனுக்கும் வேட்டையனுக்கும் நடந்த ஸ்பெஷல் மீட்டிங்!.. வைரல் போட்டோ பாருங்க!..

ரஜினியும். கமலும் பல வருடங்களாகவே போட்டி நடிகர்களாக வலம் வந்தாலும் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு இப்போதும் மாறவில்லை. இதை பல மேடைகளில் அவர்கள் நிரூபித்துள்ளனர். கமலை விமர்சித்து ரஜினி எங்கேயும் பேசமாட்டார். அதோடு, கமலை எப்போதும் புகழ்ந்தே பேசுவார் ரஜினி. தான் நடிக்கும் படத்தில் ‘பெரிய கமல்ஹாசன்’ என வசனம் பேசுவார். அதுதான் ரஜினி.
அதேபோல், கமலும் ரஜினியை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டார். ரஜினியின் குணாதிசியம் பற்றியும் அவர் சினிமாவில் தேர்ந்தெடுத்த பாதை பற்றியும் பேசுவார். பல மேடைகளில் இருவரும் தங்களின் அன்பை ஒருவருக்கொருவர் காட்டி இருக்கிறார்கள். கமல் நடிக்கும் படங்களின் ரசிகராகவே இப்போது ரஜினி இருக்கிறார்.
கமலின் அபூர்வ சகோதரர்கள் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு கமலை பார்த்தே தீருவேன் என சொல்லி அவரின் வீட்டிக்கு போய் பாராட்டிவிட்டு வந்தவர்தான் ரஜினி. இப்படி கமலின் பல படங்களை ரஜினி எப்போதும் சிலாகித்து பேசுவார். துவக்கத்தில் இருவரும் ஒன்றாக பல படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து தனித்தனி பாதையில் போனார்கள்.
ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், கமல் உலக நாயகனகவும் மாறினார்கள். இருவருக்கும் ரசிகர்கள் உண்டு. இப்போதும் அந்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொள்வதுண்டு. ஆனால், ரஜினியும், கமலும் அடிக்கடி சந்தித்து பேசிகொள்கிறார்கள். ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
கமலின் இந்தியன் 2 விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், வேட்டையன் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்தபோது ரஜினியும் கமலும் சந்தித்துகொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினி வேட்டையன் கெட்டப்பிலும் கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பிலும் இருக்கும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.