ஹீரோக்களை விட அதிகம் சம்பாதிக்கும் இசையமைப்பாளர்கள்!.. இந்த லிஸ்ட்ல இவர எதிர்பார்த்திருக்க மாட்டிங்க!..

Published on: February 18, 2023
music
---Advertisement---

சினிமாவில் ஒரு படத்திற்கு கதை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு இசையும் முக்கியமாக கருதப்படுகிறது. ஒரு சில படங்கள் இசையாலேயே வெற்றிப் பெற்றிருக்கிறது. அந்தக் காலம் முதல் இன்றைய தலைமுறையினர் வரை அதிகம் ரசிக்கப்படுவது கதையை விட இசையைத் தான்.

அப்படிப்பட்ட இசையை மக்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தி பிரபலமானவர்கள் பல பேர்.அதில் இன்றைய சூழலில் ஒரு ஹீரோக்களுக்கு நிகராக அதிக ரசிகர்களை கொண்டவர்களாக இசையமைப்பாளர்கள் வலம் வருகிறார்கள். சொல்லப்போனால் வளர்ந்து வரும் நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கப் போகிறோம்.

thaman
thaman

தமன் : ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார் தமன். ஒரு நடிகராக அறிமுகமானவர் பின் இசையின் மீதுள்ள ஆர்வத்தால் இசைத் துறையில் தன் கவனத்தை திருப்பினார். இன்று ஒரு பெரிய இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். இவர் வாங்கும் சம்பளம் 4 கோடியாம். அதுவும் சமீபத்தில் வாரிசு படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்த நிலையில் இன்னும் இவரது சம்பளம் அதிகமாகும் என்று கூறுகின்றனர்.

devi
devi sri prasad

தேவி ஸ்ரீபிரசாத் : இவர் மேடையில் வந்தாலே ரசிகர்கள் ஆட ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்கு ஒரு எனர்ஜியை ரசிகர்களிடம் உருவாக்குபவர் தேவி ஸ்ரீபிரசாத். புஷ்பா படத்தில் இவர் போட்ட இசை தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் கிட்டத்தட்ட 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் 100 படங்களுக்கு மேல் இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் 20 வருடத்திற்கு மேலாக சினிமாவில் கோலோச்சி வருகிறார்.

ani
aniruth

அனிருத் : ரசிகர்களுக்கு பிடித்தமான இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் அனிருத். இசை ஒரு பக்கம் இருந்தாலும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு பாடல் பாட மாட்டாரா என்று தவமிருந்து வருகின்றனர். முன்னனி நடிகர்களான அஜித், விஜய் படங்கள் இவரின் ஒரு பாடல் இல்லாமல் வெளிவராது. இவர் வாங்கு சம்பளம் 6 கோடியாம். ஜெயிலர் படத்தை ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

rahman
ar rahman

ஏ.ஆர்.ரகுமான் : இந்தியாவின் முதல் ஆஸ்கார் வின்னர் என்ற பெருமைக்குரிய சொந்தக்காரர் தான் ரகுமான்.இசைப்புயல் என்ற பெயருடன் வலம் வரும் ரகுமான் கிட்டத்தட்ட 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இவர் இசை எப்பேற்பட்டது என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இவரின் புகழ் உலமெங்கும் பரவியிருக்கிறது.

keera
mm keeravani

கீரவானி : இவர் ஒரு தெலுங்கு இசையமைப்பாளர். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தான் இவர். எந்த மாதிரியான இசையை அந்தப் படத்தின் மூலம் கொடுத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கிட்டத்தட்ட 16 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். இவரா இந்தப் படங்களின் இசையமைப்பாளர் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இவரின் தோற்றம் இருந்தாலும் ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தான் உண்மை.

இதையும் படிங்க : ரஜினிக்கு முன்னாடியே ஜெய்சங்கர் இதை செய்தார்!.. மனுஷன் என்னெல்லாம் பண்ணியிருக்காரு பாருங்க..