ஜெய்லர் பிரபலங்களுக்கு கார் பரிசு… மறைவில் இருக்கும் திட்டம்.. கலாநிதி மாறன் பக்கா பிசினஸ்மேன் தான்ல!

by Akhilan |
ஜெய்லர் பிரபலங்களுக்கு கார் பரிசு… மறைவில் இருக்கும் திட்டம்.. கலாநிதி மாறன் பக்கா பிசினஸ்மேன் தான்ல!
X

ரஜினிகாந்த் நடிப்பில் ஹிட் அடித்த ஜெய்லரின் பிரம்மாண்ட வசூலால் மனம் நெகழிந்த கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு கார் வழங்கியது குறித்த சம்பவம் தற்போதைய இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பீஸ்ட் படத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்லர். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. ரஜினிக்காக இல்லையென்றாலும் ஒரு விருது விழாவில் அசிங்கப்படுத்தப்பட்ட நெல்சனுக்காகவாது இந்த படம் வெல்ல வேண்டும் என பலரும் விரும்பினார்.

இதையும் வாசிங்க: டைகர் கா ஹுகும்!.. சூப்பர்ஸ்டார் மாதிரியே ட்ரை பண்றாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்!.. தீயாய் பரவும் போட்டோஸ்!..

அனுதாபம் இல்லாமல் தரமான திரைக்கதையை அமைத்து ஜெய்லரை வெற்றி படமாக மாற்றினார் நெல்சன். உச்சபட்ட வெற்றியை பெற்ற ஜெய்லர் தற்போதைய வசூல் 700 கோடியை தாண்டி இருக்கிறது. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வியாபாரம் ரொக்கமாக நடந்து இருக்கிறதாம்.

பலதரப்பினரும் இவ்வளவு வசூல் வந்துட்டு ஒரு கார வாங்கி கொடுக்கலையா என நெல்சனையே கலாய்த்து வந்தனர். ஆனால் கலாநிதி மாறன் முதலில் காரை கொடுத்தது ரஜினிக்கு தான். ஒரு காரை குடுக்காமல் 3 காரை நிறுத்தி எது பிடிக்குமோ அதை தேர்வு செய்ய சொன்னார். 21 கோடி ரூபாய் மதிப்பில் கார் கொடுக்கப்பட்டது.

இதையும் வாசிங்க: தலைவர் 170-ல் களமிறங்கும் மாஸ் வில்லன்!.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே!..

அடுத்து நெல்சனை மறக்கமுடியுமா என்ற ரீதியில் அவருக்கு இதே பாணியில் மூன்று கார் நிறுத்தப்பட்டு அவரே ஒரு காரை தேர்வு செய்தார். அதன் மதிப்பும் 10 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஜெய்லர் வெற்றிக்கு முக்கிய காரணமே அனிருத் தான்.

அவரை எப்படி தயாரிப்பு நிறுவனம் மறந்தது என கிசுகிசுக்கள் துவங்கிய நிலையில் அவருக்கும் மூன்று கார் நிறுத்தப்பட்டு அனிருத்தே ஒரு காரை தேர்வு செய்தார். இந்த கார் ப்ளானுக்கு பின்னாடி கலாநிதி மாறனின் ஒரு ஐடியாவும் இருக்கிறதாம். இந்த காரின் செலவுகள் எல்லாம் அதிகப்பட்சமாக வரியாக அரசுக்கு செலுத்த வேண்டி இருக்கும்.

தற்போது அந்த காசை சம்பாரித்து கொடுத்தவர்களுக்கே பரிசாக கொடுத்துவிடலாமே என்ற ரீதியில் தான் கலாநிதி மாறன் தொடர்ச்சியாக காரை கிப்ட் கொடுத்து இருப்பதாக சிலர் கிசுகிசுக்கின்றனர். அட கார் கொடுக்கிறதுல இப்படி ஒரு ப்ளான் இருக்கா?

Next Story