அம்மா-கணவன் லிப்கிஸ் சர்ச்சைக்கு இந்திரஜா கொடுத்த பதில்... அவங்களும் பாதிக்கப்பட்டு இருக்காங்களே!..
Indraja Roboshankar: ரோபோ ஷங்கர் மகளும், நடிகையுமான இந்திரஜாவுக்கு திருமண விஷேசங்கள் தொடங்கியதில் இருந்து ஒரே பரபரப்பு தான். அந்த வகையில் ரிசப்ஷனில் தம்பியுடன் நடனமாடும் போது பிரியங்கா ரோபோ ஷங்கர் லிப்கிஸ் கொடுத்து விடுவார். இது சர்ச்சையானது.
நடிகை இந்திரஜாவுக்கும், பிரியங்கா ரோபோ ஷங்கரின் வளர்ப்பு தம்பி கார்த்திக்கும் கடந்த மாத இறுதியில் கோலாகலமாக திருமணம் நடந்தது. மெஹந்தி பங்ஷனில் இருந்து ரிசப்ஷன் வரை எல்லா வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. என்னங்க எல்லாத்தையும் இப்படியா வீடியோ போட்டு கடுப்பாக்குவீங்க என ரசிகர்களும் கடுப்பாகினர்.
இதையும் படிங்க: பார்த்திபன் சொன்ன கதையை கேட்டு மெர்சல் ஆயிட்டேன்!.. ராமராஜன் சொல்றதை கேளுங்க!..
அந்த வகையில், ரிசப்ஷனில் இந்திரஜா கணவர் கார்த்திகும், பிரியங்கா ரோபோஷங்கரும் நடனம் ஆடுவார்கள். அப்போது இருவரும் லிப்கிஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் அது தவறுதலாக பிரியங்கா கொடுக்கும் நேரத்தில் கார்த்திக் திரும்பிவிட அது அப்படியாகிவிட்டது என சிலர் ஆதரவு தெரிவித்தனர்.
இருந்தும், நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் தேவையா? இவங்களாம் ரொம்ப ஓவர். அம்பானி வீட்டிலையே இதெல்லாம் நடக்கல எனவும் கமெண்ட்களை தட்டிவருகின்றனர். தற்போது இந்த முத்த சர்ச்சைக்கு பதிலடியாக இந்திரஜாவின் ஒருவிளக்க வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இந்த நடிகையை வர்ணித்து கமல் எழுதிய ரொமாண்டிக் பாடலா அது? ஹிட்டானதுக்கு இதுதான் காரணமா?
அவரின் நிச்சயத்தார்த்த விழாவில் ரோபோஷங்கருக்கு இந்திரஜா லிப்கிஸ் கொடுத்து இருப்பார். அப்போதே அது வைரலான நிலையில், எங்க அப்பாக்கு நான் சின்ன வயசில் இருந்து அப்படி தான் கொடுப்பேன். பார்க்கிற உங்க கண்ணுல தான் தப்பு இருக்கு. எங்க மேலே எந்த தப்பும் இல்லை.
என்னை எங்க அப்பா நல்லா தான் வளர்த்து இருக்கார். தேவையில்லாமல் இப்படி பேசாதீங்க என பேசி இருப்பார். இது பழைய வீடியோ என்றாலும் அவரின் ரசிகர்கள் இதான் இந்த பிரச்னைக்கும் பதில் என ட்ரோல் செய்பவர்களின் மூக்கை உடைத்து வருகின்றனர்.