இந்திரஜா வீட்டில் மீண்டும் விசேஷம்!.. குழந்தையுடன் கேக் வெட்டி கொண்டாடுறாங்க.. என்ன ஸ்பெஷல்?

நடிகை இந்திரஜா 2014ம் ஆண்டு தனது உறவினரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உலக நாயகன் கமலஹாசன் நட்சத்திரன் என்ற பெயரை சூட்டியிருந்தார். இந்நிலையில் நட்சத்திரன் பிறந்து இன்றுடன் 100வது நாளை கடந்ததால் அதை கேக் வெட்டி குடுப்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.

இந்திரஜா 2019 ஆம் ஆண்டு விஜய் நடித்த "பிகில்" திரைப்படத்தில் "பாண்டியம்மா" என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது உணர்ச்சிகரமான நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று தந்தது. அதை தொடர்ந்து கார்த்திக்கின் விருமன் படத்திலும் துணை நடிகையாக நடித்திருந்தார்.

காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா ஜீ தமிழில் வெளியான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரின் கவனைத்தையும் ஈர்த்தார். அதையடுத்து திருமண வாழ்க்கையில் பிஸியான இந்திரஜா ”உங்கள் பாண்டியம்மா" என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி அதில் தனது திருமணம், கர்ப்ப காலம், மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.மேலும், தற்போது இந்திரஜா ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திரஜாவின் மகன் நட்சத்திரன் பிறந்து 100 நாட்கள் கடந்ததை குடும்பத்துடன் பின்க் கலர் தீமில் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்திராஜவுக்கும் அவரது குழந்தை நட்சத்திரனுக்கும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.