பைக் மேல ஒரு அரேபியன் குதிரை!.. கட்டழகை கச்சிதமாக காட்டிய இந்துஜா.....
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் மொழி பேச தெரிந்த தமிழ் பெண்கள் மார்க்கெட்டை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. பெரும்பாலும் கேரளா, மும்பையிலிருந்தே வந்தவர்களே மார்க்கெட்டை பிடித்திருப்பார்கள். ஒருபக்கம் தமிழ் பேச தெரிந்த பெண்கள் நடிக்க முன் வரவும் மாட்டார்கள். சில துணிச்சலான பெண்களே நடிக்க வருவார்கள். அதில், இந்துஜா ரவிச்சந்திரனும் ஒருவர்.
2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை இந்துஜா. அந்த படத்தில் வைபவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.
அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், கலக்கலான உடையில் புல்லட் வண்டியின் மீது அமர்ந்து ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘பைக்கு மேல ஒரு அரேபியன் குதிரை’ என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.