இங்க நான் தான் கிங்கு!.. சந்தானத்துக்கு சரியான சங்கு!.. கவின் பட முதல் நாள் வசூல் கூட வரலையே!

அறிமுக இயக்குனர்களுக்கு தொடர்ந்து நடிகர் சந்தானம் வாய்ப்பு கொடுத்து வரும் நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு கிளிக் ஆகிறது. பல படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் வசூல் ரீதியாக போட்ட பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்பட்டது.

ஆனாலும் அந்த படமும் வசூல் ரீதியாக பெரிய அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான 'இங்கு நான் தான் கிங்கு' திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் சங்கு ஊதி இருக்கிறது.

இதையும் படிங்க: நடிச்சதோ 100.. ஹீரோயினாக 11! நீலாம்பரிக்கே டஃப் கொடுத்த நக்மா.. சுவாரஸ்ய தகவல்

கடந்த ஆண்டு சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெற்றி படமாக மாறியது. ஆனால் அதன் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் சரியாக ஓடவில்லை. அதே நிலைமை தான் நேற்று வெளியான இங்க நான்தான் கிங்கு படத்திற்கும்.

கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் மூன்று கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்த நிலையில், முதல் வாரம் அந்த படம் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

இதையும் படிங்க: தூக்கத்தில் வந்த நெஞ்சுவலி!.. பதறிய நடிகர் திலகம்!.. அன்னை இல்லம் வீட்டில் நடந்தது இதுதான்!…

இந்நிலையில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இங்க நான் தான் கிங்கு திரைப்படம் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக வெறும் 1 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அள்ளியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்தானத்தின் சம்பளமே 10 கோடி ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், அந்த படத்தின் மொத்த வசூலே 5 கோடியை தாண்டுமா? என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நல்லவேளை மோகன் வந்து என்னை காப்பாத்தினாரு!.. இல்லன்னா அவ்ளோதான்.. கமலை புலம்ப விட்டாங்களே!..

 

Related Articles

Next Story