பிக்பாஸ் சீசன் -8ல் களமிறங்கும் காதல் மன்னன்! தாங்குமா வீடு? இதுல பெருமை வேற

vijaytv
Biggboss season 8: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோக்களில் முதன்மையானது பிக் பாஸ் நிகழ்ச்சி. ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்பொழுதுமே ஒரு முன்னுரிமை தான். கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது எட்டாவது சீசனில் தான் கலந்து கொள்வதில்லை என கமல் முடிவு எடுத்திருக்கிறார்.
அதனால் இந்த சீசன் மக்கள் மத்தியில் எப்படி ஒரு எதிர்பார்ப்பை பெறப்போகிறது? யார் இந்த எட்டாவது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற வகையில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க போகிறார் என சொல்லப்படுகிறது. ஏனெனில் மக்களிடம் மிகவும் சகஜமாக பழக கூடியவர் விஜய் சேதுபதி.
எப்பொழுதுமே தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் பல அறிவுரைகளை வழங்கி வரும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்ற வகையில் அவரை பரிந்துரை செய்ததாக சொல்லப்படுகிறது. கூடிய சீக்கிரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பற்றிய ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: என்னது கோட் படம் துப்பாக்கி மாதிரி இருக்குதா… வச்சக் குறித் தப்பாது…!
அதன் பிறகு தான் இந்த சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார் என அதிகாரப்பூர்வமாக நமக்கு தெரிய வரும். இந்த நிலையில் இந்த சீசனில் எந்தெந்த போட்டியாளர்கள் களமிறங்க இருக்கிறார்கள் என்ற வகையில் பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஏற்கனவே விஜய் டிவியின் தொகுப்பாளர்களாக இருக்கும் ரக்சன், சுஜிதா போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
இதற்கு மத்தியில் பிரபல இன்ஸ்டாபுகழ் டாக்டர் திவாகர் பெயரும் அடிபட்டு வருகிறது. இதைப் பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறும்போது ‘வாய்ப்பு வந்தால் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னிடமே நிறைய பேர் சொல்கிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் பெயரும் இருக்கின்றது என்று. அதனால் என்னை கூப்பிட்டால் நான் கண்டிப்பாக போக தயார்’ என திவாகர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: துணிவு படத்தில் இந்த காட்சியை கவனிச்சீங்களா? இதுக்கு தானாம் இப்படி!..
இதற்கிடையில் நிருபர் திவாகரை குறிக்கிட்டு ‘ஒருவேளை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்னால் போவீர்களா என கேட்டதற்கு எந்த வாய்ப்பாக இருந்தாலும் நான் களமிறங்க தயார். வாய்ப்பு வருவதே பெரியது. அதை நல்ல முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என கூறி இருக்கிறார்.

diwa
திவாகரை பொருத்தவரைக்கும் இவரை காதல் மன்னன் என்றே தான் அனைவரும் அழைத்து வருகின்றனர். ஏனெனில் தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து காதல் படங்களையும் தன்னுடைய நடிப்பால் ரீமேக் செய்து காட்டியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனுஷ், சிம்பு என அனைத்து நடிகர்களின் நடிப்பை தன்னுள் வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: காசு வேணா கொடுக்குறோம்!.. மறுபடி எடுங்க!.. சூர்யா படத்துக்கு வந்த சோதனை!…
தன்னுடைய திறமையால் அனைவர் மாதிரியும் என்னால் நடிக்க முடிகிறது என திவாகர் சொன்னாலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ட்ரோலாகவே பார்க்கப்படுகிறது.