ஆடியோ லாஞ்ச் சென்னையில் ரத்தானால் என்ன? இருக்கவே இருக்காங்க - கோட்டையில் கெத்துக் காட்டப்போகும் விஜய்
Leo Audio Launch: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் இயக்க லலித்தின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்தான் படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசை அனிருத். அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் நாள்தோறும் படத்தை பற்றிய அப்டேட் வந்துக் கொண்டே இருக்கின்றது.
இந்த நிலையில் படத்திற்காக ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்கள். நேற்று மாலை வரை விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: வளையலால் தொக்காக சிக்கிய விஜயா… மறுபடியும் லட்சமா? கடுப்பில் ரோகினி…
ஆனால் இரவு படத்தின் தயாரிப்பு நிறுவனம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக இல்லை எனவும் டிக்கெட்களின் டிமாண்ட் நினைத்ததை விட அதிகமாகவும் இருப்பதால் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுகிறது .
மேலும் வேறு எந்த அரசியல் அழுத்தங்களாலும் இந்த விழா ரத்து செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டு செவன் ஸ்கிரீன் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் கடும் கொந்தளிப்பிற்கு ஆளானார்கள்.
இதையும் படிங்க: என் முகம் கொண்ட!.. உன் குணம் கொண்ட!.. குழந்தைகளின் முகத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்…
பிரச்சினை இல்லாத விஜய் படமா? என்று விஜயின் தாய் ஷோபா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கிடையில் கோகுலம் கோபாலன் போன்ற அண்டை மாநில லியோ விநியோகஸ்தர்களிடமிருந்து கொச்சியில் நிகழ்ச்சியை நடத்த படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சில செய்திகள் வருகின்றன. ஏற்கனவே கேரளாவை விஜயின் கோட்டை என்றுதான் சொல்வார்கள்.
இதையும் படிங்க: பஞ்சாயத்தே வேணாம்!. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து!.. உண்மையான காரணம் இதுதானா?!…
அதனால் கொச்சியில் நடத்த அங்கு இருக்கும் வினியோகஸ்தரர்கள் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் பெரிய ஹைப்பை ஏற்படுத்திய லியோ படத்திற்கு ஆடியோ லாஞ்ச் இல்லாமல் ரிலீஸ் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதனால் இதை பற்றி மறுபடியும் படக்குழு மறுபரிசீலனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் செப்டம்பர் 30 ஆம் தேதி படத்திற்கான டீஸர் வெளியாகும் என்று தெரிகிறது.