‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்! படம் ஆக்ஷனால மாறியிருக்கும்
Vinnaithandi Varuvaya: சிம்புவின் கரியரில் மிக முக்கிய படமாக கருதப்படுவது விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
முழுக்க முழுக்க காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இளைஞர்களை மிகவும் ஈர்த்தது. படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீப காலமாக ஏற்கனவே ரிலீஸ் ஆன படங்கள் எல்லாம் ரீ ரிலீஸ் செய்யும் பட்சத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் ரிலீஸ் செய்து வெளியிட்டார்கள்.
இதையும் படிங்க: அந்த பாட்டை கேட்டுதான் இந்த பாட்டை போட்டேன்… ஆட்டைய போட்டதை ஓபனாக ஒப்புக்கொண்ட இளையராஜா…
ரீ ரிலீஸ் செய்த படங்களில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தான் அமைந்தது. கிட்டத்தட்ட 200 நாட்களைத் தாண்டி இந்த படம் ஒரே தியேட்டரில் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அந்த அளவுக்கு இன்னும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மேல் ரசிகர்கள் அதிக அளவு ஆர்வத்தை வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு நடிப்பதாக இல்லையாம். சிம்புவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது மகேஷ் பாபு என கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். மகேஷ் பாபு தான் நடிக்க போகிறார் என தெரிந்ததும் ஸ்கிரிப்டை எழுதத் தொடங்கினாராம் கௌதம் மேனன். கதையை எழுத ஆரம்பித்ததும் கதை முடியும் வரை அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் எழுதி முடித்து அந்த ஸ்கிரிப்ட்டை கொண்டு போய் மகேஷ்பாபுவிடம் காட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: சூர்யாவும், சிவகார்த்திகேயனும் ஒன்னு தான்… ஆனா அவரு இடத்தினை பிடிக்க முடியாது… பொரிந்து தள்ளிய பிரபலம்…
அதை பார்த்ததும் மகேஷ் பாபு இந்த கதை தனக்கு செட்டாகாது என்றும் நாம் வேறொரு படத்தில் இணையலாம் என்றும் சொல்லிவிட்டாராம். அதன் காரணமாகவே இந்த படம் சிம்புவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பிறகே இந்த படத்தில் சிம்பு நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.