ரஜினியின் ஓப்பனிங் சாங்!...எஸ்.பி.பி இல்லாத குறையை தீர்த்து வைக்கும் பிரபலம் யாருனு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் தனது கானக்குரலால் அனைவரையும் ரசிக்க வைத்தவர் பாடகரும் நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியன். எம்ஜிஆர் காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் பிரகாசித்து வரும் எஸ்.பி.பி கொரானா தாக்கத்தால் கடந்த வருடம் நம்மை விட்டு பிரிந்தார்.
இவரின் குரலில் கடைசியாக வந்த பாடல் அண்ணாத்த படத்தில் அமைந்த அண்ணாத்த அண்ணாத்த பாடல் தான். பாடல் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே எஸ்.பி.பி.காலமானார். அவர் பெரும்பாலும் ரஜினியின் படங்களுக்கு ஓப்பனிங் சாங் எஸ்.பி.பி. தான் பாடியிருப்பார்.
இதையும் படிங்க : டி.ராஜேந்திரன் படங்களில் இதையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா? இந்த படம் இங்கு தான் ஷூட் செய்தார்களாம்…
கிட்டத்தட்ட 45 வருடங்களாக ரஜினியின் குரலாக எஸ்.பி.பியின் பாடல்கள் இதுவரை அமைந்திருந்தன. ரஜினிக்காக இவர் பாடிய அனைத்து பாடல்களும் செம ஹிட். இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படத்திற்கு ரஜினிக்கு ஓப்பனிங் சாங் யார் பாடுவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் ரசிகர்களே அவர்களின் அபிப்பிராயத்தை தெரிவித்தும் வருகின்றனர்.ஒரு சிலர் தேவா ஒரு சிலர் மனோ மற்றும் சிலர் கிட்டத்தட்ட எஸ்.பி.பியின் குரலாக இருக்கும் அவரது மகன் சரண் என ரசிகர்களே சாய்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். ஜெய்லர் திரைப்படத்திற்கு ஓப்பனிங் சாங் மனோ பாடினால் தான் சரியாக இருக்கும். ஆகவே மனோவையே பாட வைக்கலாம் என்று அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார்.