Cinema News
விஜய்க்கு பதிலா கார்த்திக் நடிச்சா நல்லா இருக்கும்! வினியோகஸ்தர்கள் வாங்க மறுத்த விஜய் படம்
Actor Vijay: தமிழ் சினிமாவின் சொத்து என்று சொல்லலாம் நடிகர் விஜயை. ஒரு வசூல் மன்னனாக இன்று திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டு தருகிற ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய். இவர் நடிக்கும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி பெரும் தொகையில் இவருடைய படம் விளம்பரம் செய்யப்பட்டு விற்கப்பட்டு விடுகின்றன.
கலெக்ஷனில் விஜய் உடைய படங்கள் எப்போதுமே முன்னணியில் இருந்து வருகின்றன. இப்போது ஒரு மாஸ் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆரம்ப காலங்களில் செண்டிமெண்ட்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் தான் நடித்து வந்தார். அதில் அவருக்கு மிகவும் திருப்பு முனையாக அமைந்த படம் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த ‘பூவே உனக்காக’.
இதையும் படிங்க: அந்த பாடலை பாடும்போதே அழுத பி.சுசிலா!.. சொந்த வாழ்வில் பாடகிக்கு இப்படி ஒரு சோகமா?..
அந்த திரைப்படத்தை பற்றிய சில அனுபவங்களை விக்ரமன் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி படத்தின் கதைப்படி கிளைமேக்ஸ்சில் விஜய்க்கு ஜோடி இருக்காது. இதை ஆர் பி சவுத்ரி ஒருபோதும் அனுமதிக்கவே இல்லையாம்.கிளைமாக்ஸ் தயவு செய்து மாற்றி விடுங்கள் என பலமுறை சொல்லியும் விக்ரமன் இப்படி இருந்தால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்னை நம்புங்கள் என கூறி இருக்கிறார்.
ஆனால் சௌத்திரிக்கு இதில் விருப்பமே இல்லையாம். அதனால் ஒரு ப்ரிவியூ ஷோ போட்டு பாருங்கள். அதில் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என பார்ப்போம் என சொல்லி போட்டு இருக்கிறார்கள். அதை பார்த்த அனைவருமே படத்தின் கிளைமாக்ஸ் பற்றி தான் பாராட்டி பேசினார்களாம். இருந்தாலும் சவுத்ரிக்கு உடன்பாடே இல்லையாம். அதன் பிறகு மதுரையில் ஒரே ஒரு தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கவின் படத்தில் லேடி சூப்பர்ஸ்டாரா? அதுவும் படக்குழுவே முரட்டுத்தனமே இருக்கே!
ஏனெனில் அதன் சுற்றியுள்ள திரையரங்குகளில் ராமராஜனின் திரைப்படம் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருந்ததாம். அதனால் முதலில் இந்த தியேட்டரில் போட்டு பார்ப்போம். ரசிகர்களின் வருகை எப்படி இருக்கு என பொறுத்திருந்து பார்ப்போம் என போட்டு பார்த்திருக்கிறார்கள். அந்த தியேட்டரின் உரிமையாளர் விக்ரமனுக்கு போன் செய்து படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தாராளமாக நீங்கள் ரிலீஸ் செய்யலாம் என கூறியிருக்கிறார். இருந்தாலும் ஒரு சில தியேட்டர் விநியோகஸ்தர்கள் இந்த படத்திற்கு பதிலாக கார்த்திக் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். என படத்தை வாங்க மறுத்திருக்கிறார்கள் . இருந்தாலும் விக்ரமன் விடாப்பிடியாக இந்த கதைக்கு விஜய் தான் பொருத்தமாக இருப்பார் என சொல்லி படத்தை ரிலீஸ் செய்ய படம் 100 நாள்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது
இதையும் படிங்க:கவர்னரிடமே கெத்து காட்டிய கமலின் அப்பா!.. விதையே அவர் போட்டதுதான்!.. செம மேட்டரு!..