டைட்டில் கார்டில் நீங்கள் மிஸ் பண்ண சில காமெடிகள்...இது செம இண்ட்ரஸ்டிங்!....
பெரும்பாலும் சினிமாவில் டைட்டில் கார்டினை யாருமே பார்க்க மாட்டோம். தியேட்டரில் கூட அதனை கவனித்தெல்லாம் பார்ப்பதே பலருக்கும் பழக்கம் இல்லாதது. இதை தெரிந்த பிரபலங்கள் டைட்டில் கார்டில் என்னென்ன சேட்டை செய்து வருகிறார்கள் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு நடிகை முதல் படத்தில் தானே அறிமுகம் ஆவாங்க. ஒரு நடிகை ஒவ்வொரு முறை படம் நடிக்கும் போதும் டைட்டில் கார்ட்டில் அறிமுகம் போட்ட கதை இருக்கு. சாமுராய் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் அனிதா. இவர் முதலில் சாமுராய் படத்தில் கமிட் ஆகி இருந்தாலும் அவரின் முதல் படமாக ரிலீஸாகிய வருஷமெல்லாம் வசந்தம் தான். அந்த படத்தில் அறிமுகம் எனப் போட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: கமலுக்கு இல்ல…எனக்குதான் ஜே…நாயகன் பாத்து ரஜினி சொன்னது இதுதானாம்!….
அடுத்து, சாமுராய் படம் ரிலீஸாகியது. நாங்க தானா ஃபர்ஸ்ட் கமிட்டானோம். நாங்களும் போடுவோம் என அந்த படத்திலும் அனிதா அறிமுகம் எனப் போடப்பட்டது. இதெல்லாம் கூட ஓகே. மூன்று வருடங்கள் மற்ற எல்லா மொழி படங்களிலும் நடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு திரும்பிய அனிதாவை சுக்ரன் படத்தின் எஸ்.ஏ.சி அறிமுகம் செய்தார். அதிலையும் அவர் பெயரை நிகிஷா என மாற்றி அறிமுகம் என்றே போட்டனர்.
அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகிய நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ஒரு பட்டத்தை போட்டு கொள்வார்கள். ஆனால் நடிகர் சூர்யா போட்டுக்கொள்ளவில்லை என நினைப்பவரா நீங்கள். ஆனா அவரும் போட்டார். ஸ்ரீ படத்தில் புரட்சிப்புயல் எனப் பட்டம் போட்டு ரிலீஸ் செய்தார். படம் ஃப்ளாப் என்பதால் அதன் பின் எந்த பட்டமும் வேண்டாம் எனக் கூறிவிட்டாராம்.
விஜயக்குமாரின் ஒரே மகனான அருண் விஜயிற்கு புரட்சி தளபதி எனப் பட்டம் போட்டுக் கொண்டார். ஆனால் அது சரியாக அமையவில்லை. உடனே பெயருக்கு முன்னால் ரைசிங் ஸ்டார் எனப் போட்டுக் கொண்டார். அதுவும் புஸ்ஸாகியது. அடுத்த படத்தில் அருண் என மாற்றிக்கொண்டார். அங்கும் புஸ்ஸு மீண்டும் அருண் விஜயக்குமார் எனப் பெயரை மாற்றினார். அதுவும் செட்டாகாமல் போக தான் தற்போது அருண் விஜய் என மாற்றிக்கொண்டு இருக்கிறார்.
அனிதாவை போலவே நடிகை அமலா பாலும் மூன்று படங்களில் மாறி மாறி அறிமுகம் ஆனவர். முதலில் வீரசேகரன் படத்தில் அமலா என்ற பெயரில் அறிமுகம் ஆனார். அடுத்து சிந்து சமவெளி படத்தில் அனேகா என்ற பெயரில் மீண்டும் அறிமுகம் ஆனார். அந்த படம் பெரும் சர்ச்சை ஆனது. இதனால் மைனா படத்தில் அமலாவாக மீண்டும் அறிமுகமானார். அடுத்து விகடகவி படத்தில் மீண்டும் அமலாபாலாக அறிமுகம் ஆனார்.