
Cinema History
அதிக சம்பளம் கேட்ட நடிகை; சரோஜாதேவிக்கு அடித்த லக்: அதிர்ஷ்டம் புகுந்து விளையாடிருக்கே!
நடிகை சரோஜா தேவி தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் என்பது பலரும் அறிந்த விஷயமே. சரோஜா தேவி கதாநாயகியாக நடித்த “கல்யாண பரிசு” திரைப்படம் அவரது கெரியரில் முக்கியமான திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் அவருக்கு அத்திரைப்படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

Kalyana Parisu
அதுவரை வெறும் கதாசிரியராக மட்டுமே பல திரைப்படங்களில் பணியாற்றி வந்த ஸ்ரீதர், முதல்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்தார். அதன்படி “கல்யாண பரிசு” கதை தயார் ஆனது. இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து ஒப்பந்தம் போட்டார் ஸ்ரீதர். அதனை தொடர்ந்து கதாநாயகியாக எல்.விஜயலட்சுமி என்ற நடிகையை தேர்வு செய்திருந்தாராம் ஸ்ரீதர்.
அதன்படி எல்.விஜயலட்சுமியை அலுவலகத்திற்கு அழைத்தார். அவரிடம் சம்பள விஷயம் குறித்து கேட்டபோது மிகவும் அதிக சம்பளத்தை ஊதியமாக தருமாறு கூறியிருக்கிறார். அவர் கூறிய சம்பள தொகையை கூறியதும் அதிர்ந்துபோனாராம் ஸ்ரீதர். அந்தளவுக்கு மிக அதிக தொகையை எல்.விஜயலட்சுமி சம்பளமாக கேட்டாராம். அதனை தொடர்ந்துதான் அந்த ரோல், சரோஜா தேவியிடம் சென்றிருக்கிறது. மேலும் அத்திரைப்படம் சரோஜா தேவியின் கெரியரில் ஒரு முக்கிய திரைப்படமாகவும் அமைந்திருக்கிறது.

CV Sridhar
“கல்யாண பரிசு” திரைப்படம் 1959 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இதில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி உட்பட தங்கவேலு, விஜயகுமாரி ஆகிய பலரும் நடித்திருந்தனர். இதில் தங்கவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் மிகப் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.