
Cinema News
மொக்கை பண்ணிய கார்த்தி… அவரை வச்சி செய்த அமீர்… அதான் மாஸா இருந்துச்சோ!
தமிழ் சினிமாவின் போக்கையே அடுத்த பல ஆண்டுகளுக்குத் தீர்மானிக்கக் கூடியபாரதிராஜாவின் 16 வயதினிலே போன்ற திரைப்படங்கள் அரிதாக வெளியாவதுண்டு. அப்படியான ஒரு புரட்சியைத் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய படம்தான் அமீர் இயக்கத்தில் 2006-ல் வெளியான பருத்திவீரன்.
இதையும் படிங்க: வாலிக்கே வராத நேரத்தில் கருணாநிதி போட்ட வார்த்தைகள்… எம்ஜிஆருக்கு செம பொருத்தமா இருக்கே..!
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பொருளாதாரரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார் அமீர். இருப்பினும் நண்பர்கள், உறவினர்கள் உதவியோடு படத்தை கடும் சிரமத்துக்கிடையில் எடுத்து முடித்தார். பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் மற்றும் கஞ்சா கருப்பு என 4 பேர் மட்டுமே திரைக்கலைஞர்கள்.
இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 பேரை அறிமுகப்படுத்திய அமீர், அத்தனை பேரையும் சென்னைக்கு வரவழைத்து அவர்களின் சொந்தக் குரலிலேயே பின்னணி பேச வைத்தார். பருத்திவீரன் முதல் 2 ஷெட்யூல்கள் முடித்து எடிட் செய்து பார்த்திருக்கிறார் இயக்குநர் அமீர்.
அப்போது, டைட்டில் ரோலான ஹீரோ கேரக்டருக்கு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்த அமீர், அதன்பிறகே பருத்திவீரன், முத்தழகைப் பெண் கேட்கச் செல்லும் சீனை எழுதியிருக்கிறார். சிறப்பாக வரவேண்டும் என்று அந்த சீனை மட்டும் 5 நாட்கள் எடுத்தாராம். படமும் வெளியாகி கார்த்தியின் சினிமா கேரியரையே மாற்றியது. கார்த்திக்கு முதல் படமே சூப்பர்ஹிட்டாகவும் மாறியது.
இதையும் படிங்க: என்னால இதெல்லாம் முடியாது… மலர் டீச்சரை அழ விட்ட படக்குழு…