Connect with us

Cinema News

எலேய் லோகேஷ் மட்டும் என்ன தக்காளி தொக்கா..! அனிருத் ரொம்ப சீக்கிரத்தில் போட்ட பாட்டு இதானா…

Anirudh: தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சில சுவாரஸ்யமான தகவல் குறித்து ஒரு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் சிலர் ஆச்சரியப்படும் அளவுக்கும் சில தகவல்கள் இருப்பதாக தெரிகிறது.

தற்போது லியோ, விடாமுயற்சி, இந்தியன் 2, ஜெயிலர், தலைவர் 171 என கோலிவுட்டின் ஹாட் ஹிட்  படங்கள் எல்லாத்துக்குமே இசையமைப்பாளராகி இருக்கிறார் அனிருத். அதனால் புதுப்படங்கள் எதுக்குமே கமிட்டாகாமல் இருக்கிறார். அப்படி பிஸியாக இருக்கும் அனிருத் தன்னுடைய கேரியரில் ஆச்சரியமான சில தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

இதையும் வாசிங்க:‘அயலான்’ படத்தில் மியூஸிக் டைரக்டரை மாத்திட்டாங்களா? என்னடா இது ரஹ்மானுக்கு வந்த சோதனை?

அதில், சமீபத்திய காலத்தில் ரொம்பவே ஃபாஸ்டாக கம்போஸ் செய்த பாடல் என்னவோ ப்ளடி ஸ்வீட் தானாம். அதுமட்டுமல்லாமல் சென்னையின் வெளியில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்று இருக்கிறார். அங்கு ஒரு கல்யாண நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்ததாம். அதில் ஒலிக்கவிட்ட 10 பாடலில் 9 பாடல் அனிருத்துடையது தானாம்.

அவர் இருப்பது தெரியாமல் அவர்கள் செய்தது அனிருத்துக்கே கூச்சமாக போய்விட்டதாம். சினிமாவிற்கு வரவில்லை என்றால் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக சிங்கப்பூரில் செட்டில் ஆகி இருப்பாராம். சமீபத்தில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் மறுவார்த்தை பேசாதே பாடலை கேட்கும் போது அனிருத்துக்கே பொறாமையாக இருந்ததாம்.

இதையும் வாசிங்க: ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…

ஆனாலும் இப்பாட்டை இசையமைத்த தர்புகா சிவா குறித்து ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். அதிலும் அனிருத் விவேகம் படத்துக்கு இசையமைத்த நெவர் கிவ் அப் சாங்கினை யாரும் பிடிக்கும் என்று கூறினால் அனிருத்துக்கே பெருமையாக இருக்குமாம்.

இளையராஜா இசையமைத்த பூங்காற்று பெயர் சொன்னது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் புது வெள்ளை மழை, யுவன் இசையமைப்பில் நீ தானே, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை தன்னுடைய பேவரிட் பாட்டுகள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top