தாங்கிக்கொள்ள முடியாத பிரிவு தொடங்கி சென்னையை வெறுத்த தருணம் வரை… ரஜினி வாழ்க்கையின் ஸ்பெஷல்!...

by Akhilan |   ( Updated:2024-03-06 09:59:50  )
தாங்கிக்கொள்ள முடியாத பிரிவு தொடங்கி சென்னையை வெறுத்த தருணம் வரை… ரஜினி வாழ்க்கையின் ஸ்பெஷல்!...
X

Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போராடி நடிப்பில் கொடிக்கட்டி பறந்து வருகிறார். ஒன்றும் இல்லாமல் வந்தவருக்கு இன்று கோலிவுட்டுக்குள் பெரிய இடம் இருக்கிறது. அத்தனை புகழை கொண்ட ரஜினிக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிக்கு நடிப்பின் மீதும், தனியாகக் கார் ஓட்டி செல்வதும் ரொம்ப பிடிக்குமாம். மனதுக்கு கவலை தரும் விஷயங்களை மறக்க விரும்புவாராம். பிறருக்கு உதவுவதும், தனிமையில் இருப்பதும் மகிழ்ச்சியை தருமாம். ஜால்ரா போடுகிறவர்களை அருகிலே சேர்த்து கொள்ளவே மாட்டாராம்.

இதையும் படிங்க: பழைய படங்களில் கெத்து காட்டிய பாடகிகள்… சொல்லி அடித்த கில்லி இவங்கதான்!..

மன நிம்மதியோடு வாழ வேண்டும் என்பது ரஜினியின் ரொம்ப நாள் ஆசையாம். தன்னுடைய தொழிலை பாதிக்காத கிசுகிசுக்களை சிரித்து கொண்டே ஏற்றுக்கொள்வாராம். ரொம்ப பிடித்த நடிகர், நடிகைகளில் ஸ்ரீபிரியா, கமலஹாசன், விஜயகுமார், சுஜாதா என்பது ரஜினிகாந்த் லிஸ்ட்.

கே.பாலசந்தரை வாழ்க்கையில் மறக்கவே கூடாது நபராக வைத்து இருக்கிறார் ரஜினி. சிக்கன், மட்டன் ரொம்பவே பிடித்த உணவாம். கருப்பு உடைகள் ரொம்ப பிடிச்ச டிரஸ்ஸாம். முதல் சம்பளத்தில் முதன் முதலில் சிகரெட் பாக்கெட்டை வாங்கினாராம். ஏன்டா சென்னைக்கு வந்தோம் என மதுவிலக்கு சமயத்தில் தான் அதிகமாக தோன்றியதாம்.

இதையும் படிங்க: நயன்தாரா மேல இவ்வளவு லவ்வா?!.. பிரதீப் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸில் விக்கி செய்த வேலை!..

கண்டக்டர் வேலையை விட்டு வந்தது தாங்கிக்கொள்ள முடியாத பிரிவாக இருந்ததாம். கோபம் ரொம்பவே அதிகமாம். செக்ஸ் என்பது தெய்வீகம். அதிகமாக கோபம் வந்தால் வேகமாக கார் ஓட்டுவாராம் ரஜினிகாந்த். உழைக்காமல் வாழ்கிறவர்களை ரஜினியால் மன்னிக்கவே முடியாதாம். ரஜினியால் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசும் குணத்தினை மாத்திக்கவே முடியாதாம். ரேகாவின் உடல் அழகு ரஜினிக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

காளி அடிக்கடி ரஜினி கனவில் வருவார்களாம். அவருடைய வீட்டில் பூஜையறையில் ரஜினியை அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்து இருப்பாராம். 'முள்ளும் மலரும்' படம் பார்த்துவிட்டு டைரக்டர் பாலசந்தர் ரஜினிக்கு எழுதிய கடிதத்தினை இன்னமும் பாதுகாப்பாக வைத்து இருக்காராம். இப்படி ரஜினி வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அசராமல் பாலோ செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அப்பா முதல் சல்மான்கான் வரை… தபுவின் வாழ்க்கையை சிதைத்த ஆண்கள்… வெறுத்துப்போய் செய்த காரியம்!…

Next Story