சிவாஜி, தர்பார் படங்களுக்கு ப்ளான் போட்ட லிங்குசாமி... ஆனா அவரையே தட்டிவிட்ட முக்கிய பிரபலம்...
ரஜினி நடிப்பில் முக்கிய படங்களான தர்பார் மற்றும் சிவாஜி இரண்டும் வெளியாக காரணமே இயக்குனர் லிங்குசாமி தான் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ரன் படம் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து அவரை அழைத்த ரஜினிகாந்த் கதை கேட்கிறார். லிங்குசாமி தன்னிடம் கதை இல்லை எனக் கூறிவிட்டாராம். ரஜினி தரப்பில் இருந்து சில ஒன்லைன்கள் கூறப்பட்டாலும் லிங்குசாமிக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் இயக்குனராகும் வாய்ப்பினை இழந்தார்.
சரி இயக்குனர் வாய்ப்பு தான் கிடைக்கல. தயாரிப்பாளராவது ஆகலாம் என்ற ஐடியாவில் இருந்த லிங்குசாமி ஷங்கரும் ரஜினியும் சேர்ந்து படம் பண்ணினா நல்லா இருக்கும்னு யோசித்து இருக்கிறார். உடனே இதை ஷங்கர்கிட்டயும், ரஜினிகிட்டயும் பேசி தன்னோட திருப்பதி பிரதர்ஸ்ல தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கிறார். ஆனால் சிவாஜி படம் உருவான கேப்பில் அதை அலேக்காக தட்டி சென்றதாம் ஏவிஎம் நிறுவனம்.
சரி மீண்டும் ஒரு ஐடியாவை பிடித்திருக்கிறார். அதில் உருவான படம் தான் தர்பார். ஆனால் இப்படத்தினை இயக்கிய முருகதாஸிற்கு முதல் தடவையே ரஜினி ஓகே சொல்லவில்லையாம். சில கதைகள் அவர் கூற ரிஜக்ட் சொல்லி அனுப்பிவிட்டாராம். பின்னர் லிங்குசாமியுடன் காரில் போன கேப்பில் கதை கிடைக்க அதை சொல்லி ரஜினியிடம் ஓகே வாங்கினாராம். ஆனால் இங்கேயும் லிங்குசாமிக்கு ஆப்பு வைக்கப்பட்டது. தர்பார் படத்தினை தட்டி தூக்கியது லைக்கா நிறுவனம். மொத்ததுல வட போச்சே!