More
Categories: Cinema History Cinema News latest news

சின்னவீடு படத்தால் நடந்த களேபரம்… கடைசியில் மன்னிப்பே கேட்கும் நிலைக்கு போனாராம் பாக்கியராஜ்..!

Chinna veedu: தமிழ் சினிமாவில் பெண்களின் சைக்காலஜியை அறிந்து அதற்கு ஏற்ப படம் எடுப்பதில் கில்லாடி என்றால் அது பாக்கியராஜ் தான். அப்படி அவர் எடுத்த ஹிட் படமான சின்ன வீடு படத்தால் ஒரு பெரிய சிக்கலில் சிக்கிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்து விட்டதாம். பாக்கியராஜ் எழுதி இயக்கிய திரைப்படம் சின்னவீடு. இப்படத்தில் நடிகை கல்பனா அறிமுகமானார்.

இளையராஜா இசையமைத்த இப்படத்தில் 23வதே ஆன கோவை சரளா  பாக்கியராஜின் அம்மாவாக நடித்து இருந்தார். இப்படத்தின் ரிலீஸ் முதலில் தள்ளிப்போனது. அதற்கு கோபுரங்கள் சாய்வதில்லை, ரோசாப்பூ ரவிக்கைக்காரி மற்றும் கன்னிப் பருவத்திலே போன்ற மற்ற படங்களுடன் ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் கல்கியின் ஜெயமன்மதன் என்ற கதையில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் வாசிங்க:ரஜினிக்காக விஜய் அப்படி பேசலயாம்… பின்னாடி இருக்கும் சூட்சமம் என்னனு தெரியுமா?…

பல போராட்டங்களை கடந்து ரிலீஸான இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. இருந்தும் இப்படத்தில் ஒரு பிரச்னையை சந்தித்தாராம் பாக்கியராஜ். அந்த சுவாரஸ்ய சம்பவத்தினை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

படம் ரிலீஸாகி சில காலம் கடந்து இருக்கும் ஒரு நாள் என் வீட்டு முன்னர் பல பெண்கள் வந்து கத்திகொண்டு இருந்தனர். இதை பார்த்த எனக்கு ஒன்னும் புரியவில்லை. மனைவியிடம் கேட்ட போது உங்களை பார்க்க தான் வந்திருக்காங்க. படம் பார்த்து விட்டு வந்து இருப்பதாக கூறினார்.

இதையும் வாசிங்க:தளபதி படத்தில் க்ளைமேக்ஸை சொதப்பிய மணிரத்னம்… இப்படி இருந்தா வேற லெவல்.. இயக்குனர் சொன்ன சர்ப்ரைஸ்..!

நான் அவர்களிடம் போய் என்னம்மா என்ன விஷயம் எனக் கேட்டேன். அது என்ன அப்படி ஒரு பெயர். சின்ன வீடெல்லாம் கெட்டவங்க தானா? எனக் கேட்டனர். நான் அந்த பெண்ணை மட்டும் தான் குறிப்பிட்டேன்மா. சின்ன வீடுல சிலர் இப்படி இருப்பாங்களே என்றேன்.

அது எப்படி? நாங்களாம் கூட தான் சின்ன வீடு. எங்க வீட்டுகாரர் மூஞ்சியை இனி எப்படி பார்ப்போம். எங்களை பார்க்குறவங்களாம். தப்பா நினைக்க மாட்டாங்களா எனக் கேட்டனர். எனக்கு சிரிப்பதா இல்லை அழுவதா எனப் புரியாத நிலையில் இருந்தேன். இப்படி படம் எடுத்து தான் பெண்களை புரிந்து கொண்டேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

Published by
Akhilan