தேவர்மகனுக்கு முதலில் என்ன டைட்டில் வைத்தார் கமல்... ஆனால் நடிக்க இருந்தது ரேவதி இல்லை...

by Akhilan |   ( Updated:2022-10-29 05:42:10  )
தேவர் மகன்
X

தேவர் மகன்

கமல் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த தேவர்மகனுக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

1992ஆம் ஆண்டு கமலின் எழுத்தில் உருவாகி பரதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தேவர்மகன். தற்போது வரை சிறந்த இந்திய திரைப்படங்களில் இந்த தேவர்மகன் திரைப்படமும் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த திரைப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் 7 நாளில் முடித்து விட்டாராம்.

கமல்

தேவர் மகன்

பரதன் தமிழில் ‘தேவர் மகன்’ எடுக்கும் போதும் நாசரின் கதாபாத்திரத்திற்கு முதலில் கமிட் ஆனவர் சலீம்தான். ஆனால் சில பிரச்சனைகளால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் சிவாஜி கணேசன் பெரிய தேவர் கதாபாத்திரத்திற்கு தன்னால் முடியாது என சொன்ன போது கூட கமல் அவருக்காக சில மாதங்கள் காத்திருந்தாராம்.

இதுமட்டுமல்லாது, சிவாஜி கணேசனின் காட்சிகள் அவர் உடல் நிலை கருதி வெறும் 7 நாட்களில் படமாக்கப்பட்டது. அதேபோல கமல் ஜோடியாக முதலில் முதலில் கமிட்டானவர் மீனா. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்து இருக்கிறது. ஆனால் மீனா சிறிய பெண்ணாக இருந்ததால், அவருக்கு பதில் ரேவதியை மாற்றியதாம் படக்குழு.

கமல்

கமல்

இந்நிலையில் இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் நம்மவர் தானாம். ஆனால் அது படத்தின் வீரியத்திற்கு ஏத்ததாக அமையாத காரணத்தால் வேறு டைட்டில் தேடி இருக்கின்றனர். இறுதியில் தான் ‘தேவர்மகன்’ என டைட்டில் வைக்கப்பட்டது.

Next Story