Categories: latest news

பாலிவுட் ஸ்டைலில் மாஸ் காட்டும் நாட்டாமை மகள்… கல்யாணம் எப்போ, எங்க தெரியுமா?

Varalaxmi: பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி திருமணம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சாதாரணமாக இல்லாமல் பாலிவுட் ஸ்டைலில் டெஸ்டினேஷன் வெட்டிங் ஆக இதை நடத்த தம்பதிகள் முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. அதை தொடர்ந்து அவருக்கு சில படங்களில் ஹீரோயினாக வாய்ப்புகள் வந்தாலும் வில்லியாக அவர் நடித்த படங்கள் தான் பெரிய அளவில் வரவேற்பை அவருக்கு பெற்று தந்தது. தற்போது தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் அசத்தி வரும் வரலட்சுமி மார்ச் மாதம் நிக்கோலாய் என்பவரை ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: இப்ப வாங்கடா எல்லாரும்!.. பாட்டெல்லாம் வேறலெவல்!.. விடுதலை 2-வில் பின்னியெடுத்த இளையராஜா

இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் பெரிய அளவில் விருந்தினர்கள் அழைக்கப்படாமல் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளகூடிய நிகழ்வாக நடத்தப்பட்டது. திடீரென இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் ரிலீஸ் ஆகி பலருக்கு ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சரத்குமாரை போல உருவம் இருந்த நிக்கோலாய் பல தளங்களில் விமர்சிக்கப்பட்டார். விவாகரத்து ஆனவர். ஒரு குழந்தைக்கு தந்தை என பலரும் கேலி செய்தனர்.

ஆனால் இதையெல்லாம் தன்னுடைய பேட்டி ஒன்றில் அசால்டாக தட்டிவிட்டு சென்றார் வரலட்சுமி. அவர் எனக்கு அழகானவர் தான். நான் தான் அவரை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். இதைப் பற்றி மற்றவர்கள் பேச எதுவும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து தற்போது திருமணம் குறித்த சில தகவல்கள் கசிந்திருக்கிறது.

இதையும் படிங்க: மனுஷன் இப்படி மாறிட்டாரே!.. வெற்றிமாறனை எப்படி கூப்பிடுகிறார் தெரியுமா? வாய்பிளக்கும் திரையுலகம்!

இதற்கு முன்னதாக மெஹந்தி நிகழ்வை தாஜ் ஹோட்டலில் நடத்த இருப்பதாகவும், வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையின் லீலா பேலஸில் நடத்தவும் சரத்குமார் திட்டமிட்டு இருப்பதாக முக்கிய தகவல்கள் கசிந்து இருக்கிறது. இனி இது குறித்து வரலட்சுமி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

Recent Posts

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

23 minutes ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

6 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

8 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

8 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

10 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

13 hours ago