Categories: Entertainment News

எவ்வளவு நாளா தான் குத்து விளக்கா இருக்குறது?.. செந்தூரப்பூவாக மாறிய கேப்ரியல்லா!..

விஜய் டிவியின் சொத்து என்றே சொல்லலாம் நடிகை கேப்ரியல்லா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. சிறு வயதிலேயே சின்னத்திரையில் நுழைந்தவர்.

gabi1

அந்த நடன நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகையாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகே பிக்பாஸில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தன்னை புதுப்பித்துக் கொண்டார்.

இதையும் படிங்க : பகிரங்கமா காட்டிப்புட்டீயே!.. ஸ்லீவ்லெஸ் ஆடையில் மெருகேத்தும் ஆண்டிரியா!..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கேப்ரியல்லாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இதன் பிறகாவது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்றால் இல்லை. வெறுவழியில்லாமல் சீரியல் பக்கம் நுழைந்தார்.

gabi2

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் லீடு ரோலில் நடித்து வரும் கேபி அந்த சீரியலில் ஒர் குடும்ப குத்துவிளக்காகவே மாறிப்போனார். எப்பொழுதும் புடவையிலேயே தோன்றும் கேபி அலுத்துப் போய்விட்டது போல.

gabi3

தனது இணையப் பக்கத்தில் அனல் தெறிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் செந்தூரப்பூவே பாடலில் ஸ்ரீதேவி ஊஞ்சலில் ஆடும் காட்சியை போன்றே கேபியும் ஊஞ்சலில் ஆடுவது போன்ற ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/Cm0gQ8qpevP/?utm_source=ig_web_copy_link

Published by
Rohini