விஜய் இடம் காலி... கிங்மேக்கராக மாறும் சிவகார்த்திகேயன்.. SK21 படம் இவரோட பியோபிக்கா?
Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதுமே காமெடியான நடித்துவிட்டு செல்லும் பழக்கம் உடையவர். ஆனால் அவரின் சமீபத்திய லைன்அப்பால் கோலிவுட்டில் மாஸ் ஹீரோ அவதாரம் எடுக்க இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.
மனம் கொத்தி பறவை மூலம் ஹீரோவானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை கொடுத்த புகழை சரியாக பயன்படுத்தி கொண்டவர். உச்சத்தில் இருக்கும் போதே கிடைத்த வாய்ப்புகளை பிடித்து மேலேறி வந்தார். அவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இதையும் படிங்க: ஆஸ்கார் வேணா வாங்காம இருக்கலாம்… ஆனா இதுல நம்பர் ஒன் இளையராஜாதான்!..
அந்த அடையாளத்துடனே வலம் வந்தவர். சமீபத்தில் விஎஃப்எக்ஸ்ஸில் மாஸ் காட்டிய அயலான் திரைப்படத்தில் நடித்தார். படத்தின் கதையை விட அதில் இருந்த பிரம்மாண்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து இருக்கிறது. இதே நேரத்தில் விஜயும் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார்.
அவர் இடத்தினை யார் பிடிப்பார் என்ற ஆர்வம் வேறு ஒரு பக்கம் அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் லைன் அப்புகள் பெரிய ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. SK21 திரைப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தினை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிங்க: பழைய மாவ அரைக்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்களே… பாக்கியாவுக்கு ஆப்பு ரெடியாக்கிய கோபி…
இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் பிப்ரவரி 16ந் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இப்படத்தின் கதை மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் தன்னுடைய நண்பருடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் தீவிரமாக போராடினார்.
ஆனாலும் திரதிஷ்டவசமாக அவருக்கு நிறைய காயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் உயிரிழந்தார். இவரின் பயோபிக் என்றால் கண்டிப்பாக படம் மிகப்பெரிய அளவில் தேசியபற்று பேசும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சமீபத்தில் இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த உடற்பயிற்சி வீடியோ வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாஸ்டர் மைண்ட் ரீட்டா பிரபா! முனீஸ்ராஜ் செய்த தில்லுமுல்லு வேலை.. கொந்தளித்த ராஜ்கிரண் மனைவி