Categories: Cinema News latest news

ஷூட்டிங்கில் சண்டை போட்ட லோகேஷ், விஜய்…? என்ன நடந்தது..? ஓபனாக உடைத்த லலித்குமார்..!

Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கி விட்டது. இதனால் படக்குழு பம்பரமாகி சுற்றி ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். இதில் படத்தின் ட்ரைலர் நேற்று ரிலீஸாகி சோஷியல் மீடியாவையே தன்னை பத்தி பேச வைத்து இருக்கிறது.

லியோ படம் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வந்தது. அதற்கேற்ப படத்தின் ஆடியோ ரிலீஸ் நிறுத்தப்பட்டது. அதிகாலை காட்சிக்கு இன்று வரை அரசு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. அதைப்போலவே விஜயிக்கும், லோகேஷுக்கும் படப்பிடிப்பில் பிரச்னை என ஒரு சர்ச்சை எழுந்தது.

இதையும் படிங்க: 10 வயதிலேயே சொந்த வசனத்தை பேசிய எம்.ஜி.ஆர்!.. நாடகத்தில் மாஸ் காட்டிய பொன்மன செம்மல்…

இதனால் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகளை ரத்னகுமார் தான் செய்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மாஸ்டரில் விஜயிற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்தேன். லியோ படம் என் படமாக தான் இருக்கும் என ஏற்கனவே லோகேஷ் சொல்லி இருந்தார்.

இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர் இந்த சர்ச்சைக்கு முதல்முறையாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். எந்த சண்டையும் நடக்கவே இல்லை. இது சுத்த பொய் என்றார். மேலும், எல்சியூவா இருக்குமா என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. லியோ படம் நிறைய சர்ப்ரைஸை வைத்து இருக்கிறது.

அதை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் எனவும் லாக் செய்தார். இந்த பேட்டியின் போதே, துபாயில் லியோவின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ஆனால் இதில் விஜய் கலந்துகொள்ள மாட்டார் என்றும், இயக்குனரான லோகேஷும், அனிருத்தும் மட்டுமே டீமுடன் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 18 நாட்களில் முடிக்கப்பட்ட படம்… எம்.ஜி.ஆர் ராசியால் 100 நாட்கள் ஓடிய அதிசயம்.. என்ன படம் தெரியுமா?

மேலும் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வரும் திங்கட்கிழமை ரிலீஸாகும் என்றும் கூறி இருக்கிறார். அது விஜயும், த்ரிஷாவும் இணைந்து குடும்ப பாட்டாக அமைந்து இருக்கிறது. கர்நாடகாவில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும். படத்தின் வசூல் குறித்து இரண்டாம் நாளில் இருந்து அப்டேட் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார். 

Published by
Akhilan