திமுக எம்.எல்.ஏ மகன் தான் இயக்குனர் இளவரசு... இயக்குனர் டூ அமிதாப் மாமா... பின்னணி என்ன...
தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக காமெடி வேடங்களில் கலக்கி வருபவர் நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு. இவரின் தந்தை ஒரு திமுக எம்.எல்.ஏ என்றால் நம்ப முடிகிறதா?
ஸ்டில்ஸ் ரவியின் அசிஸ்டெண்ட்டாக தன்னோட கெரியரை துவக்கியவர் இளவரசு. அப்போது சிலரின் அறிமுகம் கிடைக்க தொடர்ச்சியாக பாரதிராஜாவின் பட்டறையில் நுழைந்தார். மண்வாசனை படத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். தொடர்ச்சியாக கடலோரக் கவிதைகள் மற்றும் முதல் மரியாதை படங்களில் சின்ன வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வந்தன. சின்ன கதாபாத்திரம் என்றாலும் முகம் சுழிக்காமல் நடித்து கொடுத்துவிடுவாராம். இடையே தனது கேமராமேன் கனவுக்காகவும் உழைத்து வந்தார். இவர் ஒளிப்பதிவு செய்த மனம் விரும்புதே உன்னை படத்திற்கு விருது கிடைத்தது.
சின்ன வேடங்களில் நடித்து வந்தவரை பெரிதாக ரீச் கொடுத்தது 23ம் புலிகேசி தானாம். அதில் இவருக்கும் வடிவேலுக்கும் இருந்த அனைத்து காட்சிகளுமே அப்ளாஸ் வாங்கியது. தொடர்ச்சியாக காமெடி வேடங்கள் வரிசை கட்டியது. அதில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படத்தில் அமிதாப் மாமா என்ற கேரக்டரில் நடித்தார். மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தந்தது.
இந்நிலையில், இளவரசின் தந்தை மலைச்சாமி, 1967- லிருந்து 1971 வரைக்கும் தி.மு.க மேலூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.