More
Categories: Cinema History Cinema News latest news

புதுமுயற்சியில் இறங்கிய கமலுக்கே அதிர்ச்சி சம்பவம்…..நடந்தது என்ன?

தமிழ்சினிமாவில் படம் வெளியானபோது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகவில்லை என்றாலும் இன்றும் நாம் கொண்டாடிக்கொண்டுள்ள படம் தான் இது. 1991 தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. சந்தானபாரதி இயக்கத்தில் வந்த குணா. கமல், ரோஷிணி நடித்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக கமல் நடிப்பு குறித்து விமர்சிக்கப்பட்டது.

இந்தப்படத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை  தற்போது பார்க்கலாம்.

Advertising
Advertising

1989ல் ஸ்பானிஷ் மொழியில் வெளியான படம் டை மி அப் டை மி டவுன். மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஆபாசப்படங்களில் நடிக்கக்கூடிய ஒருவரைக் கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கணும்கற கதை. அந்தக்கதை தான் இந்த ஸ்பானிஷ் மொழிப்படம். இதை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் தான் தமிழில் வெளியான குணா.

Guna

இந்தப்படத்திற்கு கமல்ஹாசன் முதலில் வச்ச பேரு மதிகெட்டான் சோலை. இந்த பேரு ரொம்ப நெகடிவ்வா இருக்குது. இது பாக்ஸ் ஆபீஸ் டிஸ்டிரிபியூட்டருக்கு மத்தியில அவ்வளவா ஒர்க் அவுட்டாகுது. அதனால ஹீரோவோட குணாங்கற பேரையே வச்சிடலாம்னு முடிவு பண்ணினாங்க.

இந்தப்படத்திற்கு வசனம் எழுதியவர் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன். இதுக்கு முன்னாடி கமலுடன் இவர் இணைந்து பணியாற்றிய படம் நாயகன். அந்த நட்பு தான் குணா படத்திற்கும் அவரை அழைத்துச் சென்றது.

இந்தப்படத்திற்காக ஒரு புதுமுகம் தேவைப்பட்டது. அதற்காகத் தேடி அறிமுகப்படுத்திய கதாநாயகி தான் ரோஷிணி. இவங்க பாம்பேல மாடலிங்ல இருந்துருக்காங்க.

Kamal, Roshini in Guna

இந்த ஒரு படத்துல தான் இவங்க நடிச்சாங்க. அதுக்கு அப்புறம் கல்யாணமாகி யு.எஸ்.ல போயி செட்டிலாயிட்டாங்க. இன்னிக்கு வரை அவங்களைப் பற்றி எந்த தகவலும் வரவில்லை. ஆனால் அவர் நடிச்ச ஒரே ஒரு படம் குணா தான். அவருக்கு இந்தப்படத்தில் டப்பிங் கொடுத்தவர் நடிகை சரிதா.

படத்தின் இயக்குனர் சந்தானபாரதிக்கு இது 10வது படம். கமலின் நெருங்கிய நண்பர். இந்தப்படத்திற்கு முன்னாடி அவர் 1990ல் பிரபுவை வைத்து காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற படத்தை இயக்கினார்.

குணா படத்திற்குப் பிறகு 1993ல் பிரபுவை வைத்து சின்ன மாப்ளே என்ற படத்தை இயக்கினார். இந்த குணா என்ற கேரக்டருக்காக கமல் 10 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். இந்தப்படத்தின் கிளைமாக்ஸிற்கு கமல் போன்ற உருவமுள்ள அதே எடையுடன் கூடிய பொம்மையைத் தயாரித்து அந்தக் காட்சிக்கு அதாவது மலையிலிருந்து விழுவதற்காக ஸ்பெஷலாகத் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தப்படம் ரிலீஸான பிறகு கொடைக்கானல் மிகப்பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது. அங்கு படத்தில் வந்த குணா குகை என்ற இடமே டூரிஸ்ட் ஸ்பாட்டாக பிரபலமாகி விட்டது. இன்றும் அங்கு போனால் நாம் இந்த குணா குகையைக் கண்டுகளிக்கலாம்.

Devils kitchen

இந்தக் குகையைத் தேடுவதற்காக படக்குழுவினர் லொகேஷனுக்காக கொடைக்கானல் சென்றனர். அங்கு டெவில்ஸ் கிச்சன் என்ற குகை இருந்தது. 600 அடி ஆழமுள்ள குகையைக் கமல், இயக்குனர் சந்தானபாரதி, கேமராமேன் எல்லாரும் சேர்ந்து தான் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு தான் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அந்தக் குகைக்குள்ள பாட்டு அதாங்க கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலும், குகைக்குள்ள அபிராமியைக் கடத்தி வைத்த காட்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட 45 நாள்கள் தொடர்ச்சியாக சிங்கிள் ஷெடியுல்ல படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

அந்தக் குகைக்குள்ள எல்லாரும் போகணும். சாப்பாடு, கேமரா, ஜெனரேட்டர், லைட்மேன் என எல்லாரும் ரெடியாகணும்னா விடியற்காலை 3.30 மணிக்கே ஹோட்டல்ல இருந்து எழுந்து அந்த ஸ்பாட்டுக்குப் போயிட்டு அதற்கு அப்புறம் தான் உள்ளேயே போவாங்களாம்.

இது மாதிரி 45 நாள்களும் நடந்ததால டெக்னீஷியன்கள், புரொடக்ஷன் அசிஸ்டண்ட்ஸ் எல்லாருக்குமே பேசுனதை விட 3 மடங்கு அதிக சம்பளம் கொடுத்தாங்களாம்.

இந்தப்படத்திற்கு புதுமுயற்சியா நிறைய பத்திரிகையாளர்களை கமல்ஹாசன் 21.5.1991ல் அழைத்துச் சென்றுள்ளார். இது தமிழ்சினிமாவில் அதுவரை நடக்காத புதுமுயற்சி.

அப்போது ராஜீவ்காந்தியை அதே நாளில் சுட்டுக்கொன்றதால அங்க இருக்குற 50 ரிப்போர்ட்டர்களும் வெளியே வர முடியாமல் அங்கேயே 4 நாள்கள் தங்க வேண்டியதா போச்சு. அவங்களுக்கும் சாப்பாடு உள்பட எல்லா வசதியும் செஞ்சு கொடுத்தாங்க.

சென்னை தேவி திரையரங்கில் 100 நாள்கள் ஓடியுள்ளது. கோவையில் 75 நாள், மதுரையில் 60 நாள், சேலத்தில் 60 நாள், திருச்சியில் 60 நாள் என இப்படி தான் படம் ஓடியது.

கேரளாவில் 7 வாரங்கள் ஓடியது. இதோடு வெளியான தளபதி, பிரம்மா, ருத்ரா ஆகிய படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தன.

Published by
sankaran v

Recent Posts