அட்ரா சக்க… ஒருவழியா விஷயத்தை உடைச்சிட்டாங்கப்பா… கூலி படத்தின் அடுத்த கேரக்டர்…

by Akhilan |   ( Updated:2024-08-31 12:10:29  )
அட்ரா சக்க… ஒருவழியா விஷயத்தை உடைச்சிட்டாங்கப்பா… கூலி படத்தின் அடுத்த கேரக்டர்…
X

#image_title

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படக்குழு குறித்த அடுத்த கேரக்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது தற்போது உருவாகி வரும் திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி. இப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவரின் எல்லா படங்களில் இருந்து கூலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோட் ஹிட்டடிக்கும்.. மத்தவங்களுக்கு அனிருத் வேணும்… யாரோ தாக்கப்பட்டாங்களோ?

எப்போதும் போல இத்திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பு செய்ய இருக்கிறார். ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களுக்கு வரிசையாக இசையமைத்து வருகிறார். இதற்கு உண்டான முதற்கட்ட வேலைகளும் தற்போது தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் இருவரும் ஒன்றாக இருக்கும் வெளியிட்டு படத்தின் முதல் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து ரஜினியின் பழைய திரைப்படத்தின் டயலாக் உடன் கூலி திரைப்படத்தின் டைட்டில் புரோமோவும் ரிலீஸ் செய்யப்பட்டது.

sathayraj

இதைத்தொடர்ந்து இந்த வாரம் தினம் மாலை 5 மணிக்கு படத்தின் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு அவர்களின் கேரக்டர் பெயருடன் வெளியாகி வருகிறது. இந்த வகையில் முதல் அறிவிப்பாக மலையாள நடிகர் ஷாபின் ஷபீர் தயாளாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: குறி வச்சாச்சு இரை ரெடியா? வேட்டையன் ரஜினிகாந்தின் முக்கிய அப்டேட்டுங்கோ!..

அதற்கு அடுத்து தெலுங்கு முன்னணி நடிகரான நாகர்ஜுனா சைமன் வேடத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று நடிகை ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி கேரக்டரில் நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனால் இன்று யாராக இருக்கும் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்யும் விதமாக நடிகர் சத்யராஜின் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. இவர் கூலி திரைப்படத்தில் ராஜசேகர் என்னும் கேரக்டரில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்டர் பாரத் திரைப்படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட 38 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story