நான் இயக்க வேண்டியதை அவர் தட்டி பறிச்சிட்டார்.! வெற்றிமாறன் பகீர் பேட்டி.!

by Manikandan |
நான் இயக்க வேண்டியதை அவர் தட்டி பறிச்சிட்டார்.! வெற்றிமாறன் பகீர் பேட்டி.!
X

முன்பு தமிழ் திரையுலகில் கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என ஒரு குறிப்பிட்ட நபர்கள் இருப்பார்கள். அவர்களிடம் கதை வாங்கி, திரைக்கதையில் சில திருத்தங்கள் செய்து இயக்குனர்கள் இயக்குவார்கள். ஆனால், தற்சமயம் அந்த மாதிரி எதுவும் நடப்பது மிக குறைவு.

இயக்குனரே கதை, திரைக்கதை ஏன் சில சமயம் வசனம் முதற்கொண்டு எழுதவேண்டியுள்ளது. அப்படி இல்லையென்றால் அது கௌரவ குறைச்சல் போல பார்க்க தொடங்கிவிடுகின்றனர். அதனை சில படங்கள் உடைக்கின்றன.

அப்படித்தான் விடுதலை படம் ஆரம்பிக்கும் முன்னர், வெற்றி மாறன் வேறு படத்தை இயக்க கதை எழுதி இருந்தார். அது ஏற்கனவே தங்கம் என்ற எழுத்தாளரால் மூலக்கதை எழுதப்பட்டுத்திருந்தது. அதனை வாங்கி வெற்றிமாறன் கதையை இன்னும் மேம்படுத்தினார்.

இதையும் படியுங்களேன் - மீண்டும் வேலையை காட்டும் சிம்பு.! ஒரு தடவை கதை கேளுங்க சார்.! கெஞ்சும் தயாரிப்பாளர்.!

அதன் பிறகு வெற்றிமாறன் விடுதலை படம் ஆரம்பித்ததால், இந்த படத்தை செய்ய முடியவில்லை. இந்த கதையை கேள்விப்பட்ட இயக்குனர் அமீர், தானே இயக்க முன்வந்துவிட்டார். இந்த படம் தான் அமீர் இயக்கத்தில் வெற்றிமாறன் - தங்கம் ஆகியோர் கதை எழுத இறைவன் மிக பெரியவன் என தலைப்பில் படமாக்கப்பட உள்ளது.

இந்த பட அறிவிப்பு நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படம் உருவான பின்புல கதைகளை வெளிப்படையாக தெரிவித்தார். இன்னோர் இயக்குனர் எழுதிய கதையில் வேறு இயக்குனர் இயக்குவது உண்மையில் தமிழ் சினிமாவில் நல்ல தொடக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

Next Story