Connect with us
iraivan

Cinema News

வேறலெவல் வெறித்தனம்!.. ரத்தம் தெறிக்கும் சைக்கோ திரில்லர்!. ஜெயம் ரவியின் ‘இறைவன்’ டிரெய்லர் வீடியோ…

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ரத்தம் தெறிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படங்கள் அதிகமாகி உருவாகி வருகிறது. இந்த டிரெண்டை துவங்கி வைத்தது ராட்சசன் படம்தான். அதன்பின் அதுபோலவே பல படங்கள் வந்தது. சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவான போர்த்தொழில் திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படமும் அதிர வைக்கும் சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை அஹமத் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: துபாயில ஷூட்டிங் வச்சது அதுக்கும் சேர்த்துதானாம்!.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்த அஜித்!..

இதில், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் ஆகிய படங்கள் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மனிதன் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது உருவாகியுள்ள இறைவன் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க, விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக நடித்த ராகுல் போஸ் இப்படத்தில் படுமோசமான சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது. ஏனெனில், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது. அடங்கமறு படத்தை போல இந்த படமும் ஜெயம் ரவிக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறைவன் படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. டிரெய்லர் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top