அமேசான் ப்ரைமால் அசிங்கப்பட்ட பார்த்திபன்... என்ன ப்ரைம்ஜி புளூசட்டைக்கு சப்போர்ட்டா?
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் அமேசானில் வெளியாகி இருக்கும் நிலையில், அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என அமேசான் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் இரவின் நிழல். இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூலை 15ந் தேதி திரைக்கு வந்த இப்படம் அமேசானில் நேற்று வெளிவந்தது. சரி இதுல என்ன பிரச்சனையினு கேட்கிறீங்களா?
நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என இரவின் நிழல் திரைப்படம் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், அமேசானின் ட்ரிவியா செக்ஷனில் இது உலகின் இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் தான். படத்தின் இயக்குனர் பொய் கூறி வருகிறார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்த ஸ்கீரின்ஷாட்கள் வைரலாக பரவி வருகிறது.
அதேவேளையில், பார்த்திபன் இந்த பிரச்சனை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், இது முதல் படமா, இரண்டாவது படமா என்பதெல்லாம் முக்கியமில்லை. இது என்னை போன்ற கடின உழைப்பாளியின் மூன்று வருட தவம் அதுக்காக படத்தைப் பாருங்கள். முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன் எனப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.