இர்பானை கலாய்க்க நீங்க ஒழுங்கா? தானாக வந்து வண்டியில் ஏறிய விஜே பார்வதி… 

by Akhilan |   ( Updated:2025-04-03 01:00:40  )
இர்பானை கலாய்க்க நீங்க ஒழுங்கா? தானாக வந்து வண்டியில் ஏறிய விஜே பார்வதி… 
X

Irfan

VJ Parvathi: பிரபல யூட்யூபர் இர்பான் குறித்து தொகுப்பாளினி விஜே பார்வதி தன்னுடைய சமூக வலைதள கணக்குகளில் கடுமையாக சாடி இருந்தார். இதனால் தற்போதும் அவர் குறித்தும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

சமீப காலமாக யூடியூப் அவர்களின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வீடியோவாக போட்டு சம்பாதிப்பது மட்டுமல்லாமல் நல்லது செய்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாமல் சிலவற்றை செய்தும் திட்டுவாங்கிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் புட் ரிவ்யூ செய்து வந்த இர்பான் தற்போது எல்லாம் பிரபலங்களை பேட்டி எடுத்து மேலும் புகழ்பெற்று இருக்கிறார். இதனாலே என்னவோ தற்போது அவர் தொடர்ச்சியாக விமர்சனங்களை சிக்கிக் கொண்டு வருகிறார். காரில் நடத்திய விபத்து, பாலின சோதனை, பிரசவத்தில் தொப்புள்கொடி அறுத்தது என எக்கச்சக்கமாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

ஆனால் அவர் பிரச்சனையில் சிக்கினாலும் சிம்பிளாக ஒரு மன்னிப்பு கடிதத்தை போட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். இந்த ஆண்டு துவங்கியதிலிருந்து சத்தம் இல்லாமல் இருந்தவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை தொடங்கி வைத்தார்.

Irfan

ஈகை பெருநாளில் உதவி செய்ய காரில் மனைவியுடன் கிளம்பி இருக்கிறார். உள்ளே உட்கார்ந்து கொண்டே இயலாதவர்களுக்கு பொருளை கொடுக்க அவர்கள் தங்களுக்கு கிடைக்காதோ என முண்டியடிக்க அதை வீடியோவாக எடுத்து பிஜிஎம் ஒன்றை போட்டு அவர் வெளியிட்டது பலரிடமும் விமர்சிக்கப்பட்டது.

இது குறித்து தொகுப்பாளினி விஜே பார்வதி தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார். தொடர்ந்து அவர் கொடுத்த பதிவிலும், இவருக்கெல்லாம் எதற்கு பிரபலங்கள் பேட்டி கொடுக்கிறார்கள். அவருடைய பிராண்டை புரமோட் செய்து கொள்ள எந்தவித பிரேபரேஷனும் இல்லாமல் இறங்குகிறார்.

சரியில்லாத ஒருவருக்கு எதற்கு பிரபலங்கள் இன்டர்வியூ கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக இர்பான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். ஆனால் இப்படி வகையாக பேசும் விஜே பார்வதி கூட இர்பானை பேட்டி எடுத்திருப்பது குறித்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒரு வேலை இர்பான் மீது உள்ள கடுப்பில் தானே இவர் இப்படி பேசுகிறாரோ என கேள்விகளும் எழுப்பி வருகின்றனர். கண்ணாடிய பாத்து பேசுறீங்க எனவும் கலாய்த்து வருகின்றனர்.

Next Story