இதுவரை எத்தனையோ விதமான படங்கள் வந்துள்ளன. இசை, திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு என எல்லாவற்றிலும் புதுமை கண்டுள்ள தமிழ்சினிமாவில் தற்போது மற்றொரு புதுமை வந்துள்ளது.
இயக்குனர் பாபு கணேஷ் கின்னஸ் சாதனை படைத்தவர். இவர் இயக்கிய காட்டுப்புறா படம் இன்று வெளியாகிறது. இந்தப்படத்தில் ஒரு புதுமையை செய்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாமா…

10வயது குழந்தையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்த குழந்தையைச் சுற்றி 9 விதமான கேரக்டர்கள் உள்ளன. இவர்களில் பாபுகணேஷின் மகன் ரிஷிகாந்த் ஒரு முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார். பாபுகணேஷ_ம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், சரண்ராஜ், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நடித்துள்ளார்.
கானா பாலா இசை அமைத்துள்ளார். அம்மா பாடல் அழகாக வந்துள்ளது. மாலதியும், பிரசன்னாவும் ஒரே பாடலில் 14 விதமா குரலை மாற்றிப் பாடியிருக்கிறார்கள். இந்தப்படத்தில் ஒரு புதுமை என்னவென்றால் ஹாரர் சாங் வரும்போது எல்லா திரையரங்குகளிலும்மல்லிகைப்பூ வாசம் வீசும்.
தீராத நோய் நொடிக்கும் தாயே மருந்து…எந்த நொடியினிலும் இருந்துடாதே தாயை மறந்து…கருவறை குடிசையை மறந்துவிட்டாலே எந்த மாளிகையில் வாழ்ந்தாலும் பயனில்லை தானே…!என்ற வைர வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப்பாடலை எழுதி பாடியவர் கானா பாலா.
இதற்கு முன்னர் பாபுகணேஷின் வாசனை வீசும் படம் ஒன்று வெளியானது. அது கின்னஸ் சாதனை படைத்தது. அன்று முதல் கின்னஸ் பாபு கணேஷ் என்று மாறிவிட்டார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், நடன அமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர்.

இவர் முதலில் அறிமுகமான படம் 1993ல் வெளியான கடல்புறா. தொடர்ந்து இயக்குனர் விக்ரமனின் புதிய மன்னர்கள் படத்தில் நடித்தார். நானே வருவேன் என்ற வகையில் முதலில் வாசனை படத்தை எடுத்தார்.
பாபுகணேஷ் இந்தப்படத்தில் 14 விதமான பொறுப்புகளைக் கவனித்துள்ளார். 8 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் படப்பிடிப்பு ஆக 48 மணி நேரத்தில் உருவான படம் இது. ராஜ்கமல் இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
