Connect with us

latest news

எலி பட இயக்குநரின் இந்த படம் வென்றதா? கொன்றதா?.. இறுகப்பற்று விமர்சனம் இதோ!..

எலி படத்தை இயக்கி விட்டு அந்த மயான அமைதி என்னை கொன்று விட்டது சினிமாவில் இருந்தே விலகி ரொம்ப தூரம் போயிட்டேன்னு சீன் போட்ட யுவராஜ் தயாளனுக்கு எப்படி புரியும் தியேட்டரில் எலி படத்துக்கு டிக்கெட் வாங்கி விட்டு ஒரே மயான அமைதியாக ரசிகர்கள் தவித்த தவிப்பு என கிண்டலடித்து வரும் ரசிகர்கள், இன்று வெளியான இறுகப்பற்று படம் பக்கமே போக மாட்டேன் என ஒரே முடிவாக 4 வாரத்தில் ஓடிடியில் பார்க்கலாம் என இருக்கின்றனர்.

யுவராஜ் தயாளன் மொக்கை படத்தைக் கொடுத்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அதற்கு மருந்து கஷ்டப்பட்டு மூன்று காதல் கதைகளையும், விவாகரத்து கதைகளையும் மிக்ஸ் செய்து இறுகப்பற்று படத்தை நல்லாத்தான் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: லியோவுக்கு முன்னாடியே கல்லா கட்டுவாரா திரிஷா?.. தி ரோட் திரைப்படத்தின் விமர்சனம் இதோ!..

ஆனால், பெரிய ஹீரோவை வைத்து கையில் கத்தியோ அல்லது அனகோண்டா துப்பாக்கியையோ கொடுத்தால் தான் தியேட்டருக்கு ரசிகர்கள் செல்வேன் என அடம்பிடித்து வருவதை புரிந்து கொள்ளாமல் விக்ரம் பிரபுவை வைத்து படம் எடுத்து சிக்கி சின்ன பின்னமாகிட்டாரே என கலாய்த்து வருகின்றனர்.

சரி, அந்த கதையை விடுவோம்.. இறுகப்பற்று படமாக ரசிகர்களை எந்தளவுக்கு திருப்திப்படுத்தியது என்கிற கதைக்கு வருவோம்..

விக்ரம் பிரபுவும் அவருக்கு மனைவியாக நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் எந்தவொரு சண்டையும் சச்சரவும் இல்லாத அன்பு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். சைக்காட்ரிஸ்ட்டான ஷ்ரத்தா ஸ்ரீநாத் திருமண உறவில் பிரிவு ஏற்பட்டு தன்னிடம் வரும் ஜோடிகளை எப்படி சமாதனப்படுத்தி அனுப்புவது என்கிற வேலையை பார்த்து வருகிறார்.

இதையும் படிங்க: லியோ 9 மணி காட்சியும் இல்லையா?!.. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. பாவம் விஜய் ஃபேன்ஸ்!..

அவரிடம் மனைவி மாசமானதுக்கு அப்புறம் குண்டாயிட்டா, வாயைத் திறந்தால் நாத்தம் அடிக்குது (புருஷனுக்கு பதில் அபர்ணதி சரக்கடிக்கிறாரோ) என புகார்களுடன் பொண்டாட்டியே வேண்டாம் விவாகரத்து பண்ண வேண்டும் என துடிக்கிறார். உன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஆனதே பெரிய விஷயம் என 90ஸ் கிட்ஸ் திட்டுவது தெளிவாக கேட்கிறது.

அதே போல மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜே உதறி விட்ட ஸ்ரீ பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓடியதற்கு பிறகு ரொம்ப வருஷம் கழிச்சு சானியா ஐயப்பன் ஜோடியா கிடைச்சும், லவ் ஃபீல் வரவில்லை, டைவர்ஸ் வேண்டும் என வந்து நிற்கிறார். இந்த ரெண்டு கொடுமையை ஷ்ரத்தா சரி பண்ணுவார் என பார்த்தால், விக்ரம் பிரபு வேதாளமாக முருங்கை மரத்தில் ஏற சைக்காட்ரிஸ்ட் வாழ்விலேயே விரிசல் விழ ஆரம்பிக்கிறது. இவை எல்லாம் எப்படி சுபமாக முடிந்ததா? சோகமாக முடிந்ததா? என்கிற படத்தைத் தான் யுவராஜ் தயாளன் எடுத்துள்ளார். ஆனால், ட்விட்டர் விமர்சனம் போடுவதற்கு கூட ஆள் இல்லாத அளவுக்கு அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் போன வாரம் தியேட்டரில் 3 படங்கள் வச்சு செய்ததே போதும் இறைவா என எஸ்கேப் ஆகி விட்டனர்.  சனி, ஞாயிறுகளிலாவது கூட்டம் வருகிறதா என்று பார்ப்போம்.

இறுகப்பற்று – வாழ்க வளமுடன்!

ரேட்டிங் – 3.5/5.

google news
Continue Reading

More in latest news

To Top