சுதா கொங்கராவும் இந்த வேலையை செஞ்சிட்டாரே..! இறுதிச்சுற்று படத்தின் மீது எழுந்த விமர்சனம்..!

by Akhilan |
சுதா கொங்கராவும் இந்த வேலையை செஞ்சிட்டாரே..! இறுதிச்சுற்று படத்தின் மீது எழுந்த விமர்சனம்..!
X

Sudha Kongara: தமிழ் சினிமா இயக்குனர்கள் கதை ஒவ்வொரு முறையும் புதிதாக எடுப்பதற்கு திணர தான் செய்வார்கள். அதில் சிலர் உண்மை கதையை கேட்டு அதற்கு திரைக்கதை போட்டு இயக்கிவிடுவார்கள். அப்படம் வெற்றி பெற்றுவிட்டால் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற உண்மை சம்பவம் வெளியாகி இருக்கிறது.

பெண் இயக்குனர் சுதா கொங்கரா மணிரத்னத்தின் உதவி இயக்குனராக ஏழு வருடம் பணிப்புரிந்தவர். இதை தொடர்ந்து துரோகி என்ற படத்தினை இயக்கி இருந்தார். அது பெரிய அளவில் ரீச் கொடுக்கவில்லை. அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் தான் இறுதிச்சுற்று.

இதையும் படிங்க: ஜேசுதாஸ் பாதி.. எஸ்.பி.பி.. பாதி… கலந்து செய்த கவிதை.. யார் அந்தக் காந்தக் குரல் பாடகர்?..

மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. வசூல் வேட்டை நடத்தியது. மாதவன் மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஒரு ஏழை குத்துச்சண்டை வீராங்கனையின் வாழ்க்கையை இப்படம் அப்பட்டமாக சொல்லியது. இந்த கதையின் உண்மையான வீராங்கனை யார் என்பதை சுதா கொங்கரா சொல்லவில்லை.

அவர்களின் பெயர் கூட படத்தில் இணைக்கப்படவில்லை. தற்போது இதுகுறித்து அந்த வீராங்கனையே கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. நேரு ஸ்டேடியத்தில் நான் அவரை சந்தித்தேன். என் அம்மா இந்து, அப்பா கிறிஸ்டியன். என் அக்கா கதாபாத்திரமும் அதில் இருந்தது.

இதையும் படிங்க: சூர்யா43 இந்த பிரச்னையை தான் சொல்ல போகுதா.. அப்போ தமிழ் ரசிகர்கள் கொண்டாடிடுவாங்களே..!

இறுதிச்சுற்று என் கதை தான். 4 மணி நேரம் கதை சொன்னேன். மும்பையில் இருந்து ரைட்டரை வரவைத்து எழுதினார்கள். ஆனால் படம் பார்த்தப்போது எனக்கு எந்த க்ரெடிட்டும் கொடுக்கவில்லை. துளசி, சரஸ்வதி என எங்க பெயரை ஏன் போடவில்லை என்பது குறித்து கேட்க அவரை பார்க்க போனேன். அது உன் கதை மட்டுமல்ல 3 பேரிடம் கேட்டேன் எனச் சொன்னார்.

நான் தான் செக்ரட்ரி மேல 2011ல் கேஸ் போட்டேன். அதை தான் நீங்க படமா எடுத்துருக்கீங்க. அந்த கதையெல்லாம் யார் சொன்னாங்க எனக் கூறினேன். பின்னர் கேஸ் போட்டியா என தெரியாதது போல கேட்டார். மொத்த கதையும் நான்தான் சொன்னேன். படம் ஹிட்டாகி விட்டதால் அவர் பேச்சில் மாற்றம் இருந்தது. கமிஷனர் தெரியும் என்றார். என்னை மிரட்டுவது போல பேசினார். நானும் ரொம்ப நன்றி எனக் கூறி வந்துவிட்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீராங்கனையும் பேட்டியை காண: https://www.instagram.com/reel/C0lEoPAxzgx/?igshid=NGEwZGU0MjU5Mw==

Next Story