Connect with us
vijayakaanth

Cinema News

விஜயகாந்த் ஏஐக்கு சம்பளம் இத்தனை கோடியா? கையில் இருந்த கவர கவனீச்சீங்களா?

Goat Movie: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் கோட். அந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்காந்தை ஏஐ டெக்னிக் மூலமாக பயன்படுத்தி அவரை மீண்டும் திரும்ப கொண்டு வந்திருக்கின்றனர்.

ஆனால் விஜயகாந்தை எங்கள் அனுமதியில்லாமல் யாரும் ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை விட்டிருந்தார். ஆனாலும் கோட் படத்தில் பயன்படுத்தியிருப்பது அவருடைய அனுமதியின் பெயரில்தான் என தெரிய வந்திருக்கிறது. இதற்கு முன் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த இருக்கிறோம் என இயக்குநர் கூறியிருந்த நிலையில் பிரேமலதாவின் இந்த அறிக்கைக்குப் பிறகு அந்த ஒரு முயற்சியை கைவிட்டனர். மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் படக்குழு.

இதையும் படிங்க: விஜயகாந்த் பேர சொல்லி ஏமாற்றிய ராவுத்தர்!.. ரஜினி படத்தை மிஸ் பண்ண இயக்குனர்!…

அதுவும் கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்துவதால் அவர் வரும் காட்சி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்றும் சாதாரணமாக இருக்கக் கூடாது என்றும் விஜய் கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயகாந்த் வீட்டிற்கு கோட் படத்தின் படக்குழு சென்றிருந்தனர்.

கூடவே விஜயும் சென்றிருந்தார். அங்கு விஜய்காந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அவருடைய ஆசிகளை பெற்றார் விஜய். இதில் விஜயகாந்தின் தொண்டர்கள் விஜய் வந்ததை பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்யாமல் வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனெனில் விஜயகாந்த் மறைவிற்கு வராத வெங்கட் பிரபு இப்போது வந்திருப்பது அவருக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் வந்துவிடுவார் என சொல்லி விமர்சிப்பதாக மீசை ராஜேந்திரன் கூறினார்.

vijij

vijij

இதையும் படிங்க: கடுப்பில் இருக்கும் மீனா… தங்கமயில் புராணமா இருக்கே… களைக்கட்டும் பிறந்தநாள்..

மேலும் விஜய் மற்றும் கோட் படக்குழு பிரேமலதாவிடம் பேசும் புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வர அதில் அர்ச்சனா கல்பாத்தி கையில் ஒரு கவர் இருப்பதாக சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் இது ஒரு வேளை விஜயகாந்தை ஏஐ மூலமாக பயன்படுத்தியதற்கு அவருக்காக கொடுக்கப்படும் சம்பளமாக இருக்கலாம் என கூறி வருகிறார்கள்.

அதுவும் இது 50 கோடி அல்லது 100 கோடி என சோசியல் மீடியாக்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். இதைப்பற்றி மீசை ராஜேந்திரன் கூறுகையில் சம்பளம் வாங்குவதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஏனெனில் திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி ஒரு பெரிய ஆளுமையாக இருந்தவர் விஜயகாந்த். அவரை ஏ ஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியதற்கு கொடுக்கப்படும் சம்பளமாக கூட இருக்கலாம்.

இதையும் படிங்க:நடிப்பு சரியில்லன்னு சொன்ன இயக்குனர்… சிவாஜியை சமாளித்த கமல்..!

ஆனால் அது எவ்வளவு என எங்களுக்கு தெரியாது என கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் 50 கோடி 100 கோடி என கூறுவது மடத்தனமாக இருக்கிறது. அப்படி எனில் கோட் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை பெற்றால் தான் 50 கோடி 100 கோடி என்ற அளவில் சம்பளத்தை கொடுக்க முடியும். அதனால் அந்த அளவு இருக்காது என மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top