கட்சிக்கொடி விவகாரம்! விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறதா?

by Rohini |
vijay 2
X

vijay 2

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்மிக்க நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். நேற்று அவர் தன்னுடைய கட்சி கொடியை அறிமுகம் செய்ததில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறார். சிவப்பு , மஞ்சள் நிற கலரில் கொடி இருக்க அதன் நடுவே வாகை மலரும் இருபுறமும் யானைகளும் இருப்பது மாதிரி அந்த கொடியில் சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினத்தில் இருந்தே கொடி பற்றி பல பேர் பலவிதமான கருத்துக்களை கூறி வந்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் இதற்கு எதிராக புகார் கொடுத்திருந்தார். அவர்களின் கட்சிக் கொடியிலும் யானை இருப்பதால் அதை விஜய் பயன்படுத்தக் கூடாது என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று கொடியே பிரச்சினைதான் என்ற வகையில் எல்லா பக்கமும் இருந்து விஜய்க்கு நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதையும் படிங்க: பொண்டாட்டி புள்ள வரல!.. ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து!.. விஜய்க்கு அரசியல் தேவையா?!.. விளாசும் பிரபலம்..

அதாவது தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாக விஜய் மீது ஆர்.கே. நகரை சேர்ந்த ஒருவர் ஆன் லைன் மூலமாக புகார் மனுவை அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மேலும் கேரள அரசு போக்குவரத்து சின்னமான யானை இருப்பதாகவும் அந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளாளரின் நிறம் இருப்பதாகவும் ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையில் அந்நாட்டின் தேசிய கொடியை போன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் 69 படத்துக்கு இப்படி ஒரு சதியா? தளபதியோட நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன?

மேலும் உத்தவ் தாக்ரே வழக்கில், கொடிகளில் விலங்குகளை சின்னமாக பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவை பிறப்பித்திருக்கும் நிலையில் விஜய் அவருடைய கொடியில் எப்படி யானையை பயன்படுத்த முடியும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதலே கொடிகளில் பறவைகள் மற்றும் விலங்குகளை சின்னமாக பயன்படுத்தக் கூடாது என அறிவித்திருக்கும் நிலையில் இதையெல்லாம் விஜய் சரிவர கவனிக்காமல் அவர் கொடிகளில் பயன்படுத்தியது தவறு. அதனால் அவர் மீது தேச குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இயக்குனராவதற்கு முன் மாரி செல்வராஜ் என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க!..

Next Story