பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ!.. நடிகை மீனாவின் மறுமணம் குறித்து வெளியான காரணம்!..

meena
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. 90களின் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து ஏகப்பட்ட விருதுகளுக்கு உரிமையாளராக தற்போது திகழ்கிறார்.

meena
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் நடித்து தென்னிந்திய மொழிகளிலேயே முன்னனி நடிகையாக வலம் வந்தார். நடிப்பது மட்டுமில்லாமல் டெலிவிஷன் நிகழ்ச்சிகள், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடுவது என சிலவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இவர் உச்சத்தில் இருக்கும்போதே ஐதராபாத்தை சேர்ந்த ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகரை மணந்தார். நன்றாக போன இவர்களது திருமண வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக கடந்த ஜனவரி மாதம் ஒரு புயலே வீசியது. அவரது கணவர் நுரையீரல் தொற்றால் அவதியுற்று வந்தார்.

meena
இதையும் படிங்க : ஃபாரின் டிரிப் கிளம்பிய அஜித்?.. ஏர்போர்ட்டில் கையெடுத்து கும்பிட்ட வீடியோ வைரல்!..
அந்த நோயின் தீவிரம் அதிகமானதால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கணவர் மறைவிற்கு பின் மீனா மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய மகளான நைனிகாவும் சொல்லமுடியா துக்கத்தில் இருந்தார்.
இவர்களுக்கு ஆதரவாக உறவினர்களும் திரையுலக நண்பர்களும் தான் ஆறுதலாக இருந்தனர். நடிகை குஷ்பு, நடிகை சங்கீதா, நடிகை ரம்பா, நடிகை பிரீத்தா போன்றோர் தான் கூடவே இருந்து இன்று வரை மீனாவுக்கு ஆறுதலாக இருக்கின்றனர்.

meena
இதையும் படிங்க : தியேட்டர்ல ஹிட்… ஓடிடியில் ஃப்ளாப்… ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய லேட்டஸ்ட் திரைப்படங்கள்…
இந்த சமயத்தில் நடிகை மீனாவின் மறுமணம் குறித்த சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன் தான் மீனாவின் தந்தை காலமானாராம். அவர் இறந்த சில மாதங்களிலேயே அவரது கணவரும் இறந்தார். ஆகவே ஆண் துணை இல்லாமல் இனி எப்படி தன் மகளுடன் காலத்தை கடக்க முடியும் என அவரது திரையுலக தோழிகள் கூறிவருகின்றனராம்.

meena
உனக்காக இல்லை என்றாலும் மகளுக்காகவது மறுமணம் குறித்து நல்ல முடிவை எடு என்றும் கூறிவருகின்றனராம். எனினும் இதை பற்றி மீனா என்ன சொல்ல போகிறார் என்று தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.